"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
தர்பார் படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இன்னும் பெயரிடப்படாததால் இப்படத்தினை தலைவர் 168 எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.
இப்படத்தில் குஷ்பு, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் உள்ளனர். இவர்களில் குஷ்புவும், மீனாவும் ரஜினிக்கு இரண்டு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் கடந்த 1994ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயத்தில் வெளியான வீரா படத்தில் ரஜினி இரண்டு மனைவிகளுக்கு கணவராக நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவல் உண்மையென்றால், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், அப்போதும் ரஜினியின் இரண்டு மனைவிகளில் ஒருவராக மீனா நடித்திருந்தார். தற்போதும் அவரே நடிக்கிறார். வீராவில் மற்றொரு மனைவியாக ரோஜா நடித்திருந்தார். தற்போது குஷ்பு நடிக்கிறார்.
சமீபத்திய பேட்டியில் விஸ்வாசம் படத்தைப் போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் குடும்ப செண்டிமெண்ட், ஆக்ஷன், காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என இயக்குநர் சிவா தெரிவித்திருந்தார். ஒருவேளை இரண்டு மனைவிகளுக்கு இடையே ரஜினி சிக்கிக் கொண்டு நடத்தும் பாசப் போராட்டம் தான் தலைவர் 168 படத்தின் கதையாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.