மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக, நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் டுவிட்டரில், கருத்துகள் வெளியிட்டனர். இதற்கு பதிலடியாக ரஜினிக்கு ஆதரவாக IStandWithRajinikanth என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்துகள் பதிவிட, அது இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் சில வன்முறை சம்பவங்களும் நடந்து துப்பாக்கி சூடு கூட அரங்கேறி உள்ளது. இந்நிலையில், ரஜினி டுவிட்டரில், ‛‛எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது'' எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர், டுவிட்டரில் ரஜினியை விமர்சித்து ShameOnYouSanghiRajini என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், IStandWithRajinikanth என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
இந்த ஹேஸ்டேக்கில், ரஜினியை புகழ்ந்தும், அவரது கருத்தை ஆதரித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.