Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை திரைப்பட விழா: ஒத்த செருப்பு, சில்லுகருப்பட்டி, பக்ரீத் படங்களுக்கு விருது

20 டிச, 2019 - 12:15 IST
எழுத்தின் அளவு:
OS7-got-first-prize-in-CIFF-2019

சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படத்துக்கான விருது போட்டியில் 12 படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த படத்துக்கான விருது பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு கிடைத்தது.

பெண் இயக்குனர் கலிதா ஷமீம் இயக்கிய சில்லுகருப்பட்டி, விக்ராந்த் நடித்த பக்ரீத் ஆகிய படங்கள் இரண்டாவது பரிசை பகிர்ந்து கொண்டன. அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன், ஜீவி படத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் ஆகியோருக்கு சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருது வழங்கப்பட்டது.

ஒத்த செருப்பு சைஸ் 7
இது தொடர்பாக சர்வதேச திரைப்பட விழா குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி. கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள், தொழில்நுட்பத்தைக் கதை சொல்லலுக்காகக் திறம்படக் கையாண்டது, திரையில் தோன்றாத சக கதாபாத்திரங்களை மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளும் ஜாலத்தை இறுதிவரை சாத்தியமாக்கியது. முக்கியமாக, தனிநபர் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்தது, சிறு முதலீட்டில் மிகச்சிறந்த திரைப்படம் செய்ய இளைஞர்களை ஊக்குவித்தது ஆகிய காரணங்களுக்காக 'ஒத்த செருப்பு - சைஸ் 7' சிறந்த திரைப்படத்துக்கான முதலிடத்தைப் பெறுகிறது.

இரண்டாம் இடம்
தமிழின் முதல் முழுமையான தொகுப்புத் திரைப்படம். மனித உறவுகளின் மேன்மையை, புதிய கோணங்களில் பலநிலைக் காதலை அணுகிய முறையிலும், கதாபாத்திர வடிவமைப்பில் சமரசமற்ற நேர்மையைக் கடைபிடித்த வகையிலும்.. பார்வையாளரிடம் உடனடியாகவோ காலப்போக்கிலோ மன மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த திரை அனுபவத்தைத் தருவதாலும். நேர்த்தியான திரை ஆக்கத்தை சாத்தியமாக்கிய வகையில் சில்லுக்கருப்பட்டி திரைப்படமும், முற்றிலும் புதியக்கதைக் களத்துக்காகவும். உன்னதமான சிறந்த கதைக்காகவும், திட்டமிட்டோ, எதிர்பாராமலோ முதன்மைக் கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணம் நம்பகமாகவும். கதாபாத்திரங்கள் வாழும் நிலத்தின் சமகால சமூக வாழ்க்கையும், பயணவழியில் எதிர்பாராத தருணங்கள் தரும் தரிசனமும் உணர்வூக்கத்துடன் பதிவாகியிருப்பதா பக்ரீத் திரைப்படமும் சிறந்த இரண்டாவது படத்துக்கான இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

சிறப்பு ஜூரி விருது
சாதிவேரின் ஆழத்தை பதிவு செய்த எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை சிறந்த முறையில் திரைக்கு கொண்டு வர முயற்சித்ததற்காகவும். ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், சக மனித படுகொலைகளின் பின்னால் இருக்கும் புரையோடிய சாதிய வன்மத்தின் முகத்தையும் அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று, அவர்களது நியாயத்தை துணிச்சலுடன் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்கத்துக்காகவும், நட்சத்திர நடிகரை, கதாபாத்திர நடிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளும் தொடர் முனைப்புக்காகவும் 'அசுரன்' திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.

புதியக் கதைக் கரு, முதன்மை மற்றும் துணைக் கதாபாத்திரங்களை திரைக்கதை கோரும் முழுமையுடன் வடிவமைத்தது. தர்க்கமும் எளிமையும் கொண்ட சிறந்த உரையாடல் மற்றும் திரைக்கதைக்காக, ஜீவி திரைப்பட எழுத்தாளர்கள் பாபு தமிழ் - வி.ஜே.கோபிநாத் இருவருக்கும் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ.கவில் இணைந்தார் பரத்வாஜ்பா.ஜ.கவில் இணைந்தார் பரத்வாஜ் ‛கடைசி விவசாயி'-யின் கதை ‛கடைசி விவசாயி'-யின் கதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in