ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
2019ம் ஆண்டில் அதிகம் சம்பளம் பெற்ற டாப் 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதிக சம்பளம் பெற்ற 100 இந்திய பிரபலங்களின் பட்டியலில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாததாக முதல் முறையாக பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி முதல் இடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் அக்ஷய் குமார், மூன்றாம் இடத்தை சல்மான் கான் உள்ளனர்.
இதே போன்று டாப் 10 பட்டியலில் முதல் முறையாக நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோனே என 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 2019ம் ஆண்டில் பெற்ற சம்பளம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்கள் மூலம் பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
டாப் 10 பிரபலங்கள்
1. விராட் கோஹ்லி (ரூ.253.72 கோடி)
2. அக்சய் குமார் (ரூ.293.25 கோடி)
3. சல்மான் கான் (ரூ.229.25 கோடி)
4. அமிதாப் பச்சன் (ரூ.239.25 கோடி)
5. எம்.எஸ்.தோனி (ரூ.135.93 கோடி)
6. ஷாருக்கான் (ரூ.124.38 கோடி)
7. ரன்வீர் சிங் (ரூ.118.2 கோடி)
8. ஆலியா பட் (ரூ.59.21 கோடி)
9. சச்சின் டெண்டுல்கர் (ரூ.76.96 கோடி)
10. தீபிகா படுகோனே (ரூ.48 கோடி)
தென்னிந்திய பிரபலங்கள்
தென்னிந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி இந்திய அளவில் 13வது இடத்தையும், தென்னிந்தியாவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய அளவில் 16வது இடத்தையும், தென்னிந்திய அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் 56வது இடத்தில் உள்ளார். நடிகர் விஜய் 47வது இடத்தையும், அஜித் 52வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தென்னிந்திய பிரபலங்கள் பட்டியல்
ரஜினி - 13வது இடம் (100 கோடி)
ஏ.ஆர்.ரகுமான் - 16வது இடம் (94.8 கோடி)
மோகன்லால் - 27 வது இடம் (64.5 கோடி)
பிரபாஸ் - 44வது இடம் (35 கோடி)
விஜய் - 47 வது இடம்(30 கோடி)
அஜித் - 52வது இடம் (40.5 கோடி)
மகேஷ் பாபு - 54 வது இடம்(35 கோடி)
டைரக்டர் ஷங்கர் - 55 வது இடம்(31.5 கோடி)
கமல்ஹாசன் - 56வது இடம் (34 கோடி)
மம்முட்டி - 62 வது இடம்(33.5 கோடி)
தனுஷ் - 64 வது இடம்(31.75 கோடி)
‛சிறுத்தை' சிவா - 80வது இடம் (12.17 கோடி)
கார்த்திக் சுப்பராஜ் - 84வது இடம் (13.5 கோடி)