டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளிவந்த கார்த்தி நடித்த 'கைதி' படம் கடந்த மாதம் நவம்பர் 25ம் தேதி 'ஓடிடி' தளங்கள் எனப்படும் இணைய வழி ஒளிபரப்பில் வெளியிடப்பட்டது.
தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக வசூல் செய்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படம் வெளியான 30வது நாளில் இப்படி இணைய வழியில் ஒளிபரப்பு செய்யப்படலாமா என தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு எழுந்தது.
ஆனால், 'கைதி' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “பைரசி, 3வது வார தியேட்டர் விதிமுறைகளால் தயாரிப்பாளர் இழக்கும் தொகையை, ஓடிடி வகையில் ஈடுசெய்யும் வருமானம் கிடைக்கும்,” என்று தெரிவித்திருந்தார்.
'கைதி' படத்தைத் போலவே படம் வெளியான 30வது நாளில் த்ருவ் விக்ரம் நடித்துள்ள 'ஆதித்ய வர்மா' படத்தை ஓடிடி தளத்தில் டிசம்பர் 21ம் தேதி வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சாட்டிலைட் உரிமைகள் அளவிற்கு ஓடிடி உரிமைகள் மூலம் பெரும் தொகை கிடைப்பதால் தயாரிப்பாளர்கள் அவற்றை அப்படி விற்பதாகத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.