Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட நடிகை ரிச்சா

18 டிச, 2019 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Richa-gangopadhyay-married-US-man

2010ல் தெலுங்கில் வெளிவந்த 'லீடர்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்தார். அதன் பின் சில தெலுங்குப் படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த போதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்கச் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பின் பலமுறை மீண்டும் அவர் நடிக்க வருகிறார் என்ற செய்தி வந்த போதெல்லாம் அவற்றை மறுத்தார்.

இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கிளாமரும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
செல்பி எடுக்க முயன்ற ரைசாவுக்கு நேர்ந்த கதியை பாருங்க!செல்பி எடுக்க முயன்ற ரைசாவுக்கு ... மோகன்லாலுடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ; த்ரிஷா மோகன்லாலுடன் நடிக்கும் கனவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 டிச, 2019 - 07:08 Report Abuse
skv srinivasankrishnaveni ஆல்ரெடி ஜென்மத்திதுஷனியாக அவன் வாழ்க்கை மூவிங் வாழ்க பல்லாண்டு டியர் சிம்பு ப்ளீஸ் BE A நைஸ் HUSBAND
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
19 டிச, 2019 - 12:28 Report Abuse
மூல பத்திரம் வாழ்த்துக்கள்
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
19 டிச, 2019 - 12:14 Report Abuse
Asagh busagh இங்க இருந்திருந்தா மீடுல சிக்கி சின்னாபின்ன படுத்தியிருப்பானுங்க. நல்ல காலம் தப்பிடீங்க. வாழ்க வளமுடன்.
Rate this:
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
19 டிச, 2019 - 02:46 Report Abuse
NewIndia_DigitalIndia அவனுக்கு ஏழரை ஆரமித்துவிட்டது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in