பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
தன்னுடைய தபங் 3 பட புரொமோசனுக்காக சென்னை வந்திருந்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பல விசயங்களைப் பேசினார். அதனைத் தொடர்ந்து அவரை நடிகர் சிவகார்த்திக்கேயன் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் ஹீரோ மற்றும் தபங் 3 படங்களின் வெற்றிக்காக மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
சல்மானைத் தான் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திக்கேயன். அந்தப் பதிவில் அவர், “சூப்பர் ஹீரோ சல்மான் கானை சந்தித்தது மறக்க முடியாதது. எனக்காக உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. உங்களுடைய தபங் 3 படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். நிச்சயம் அப்படம் மாபெரும் வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' படத்த்தை தயாரித்துள்ளது. அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் தபங் 3யின் தமிழ் வெர்சனையும் இந்நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.