திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் | லண்டனில் 1540 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்த ஆர்யா | பிரமாண்டமாக நடைபெறும் வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு | 'ஜகமே தந்திரம்' பற்றி 'கிரே மேன்' இயக்குனர்கள் கருத்து | ஜெயம் ரவி படத்தை முடித்த நயன்தாரா | சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது | புஷ்பா 2வில் விஜய்சேதுபதி இல்லை | ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா |
வெங்கட்பிரபு, கஸ்தூரி பத்ரி இணைந்து தயாரித்து, இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பிலும் உருவான படம் ‛ஆர்.கே.நகர்'. வைபவிற்கு ஜோடியாக சனா அல்தாப் நடித்திருக்கிறார். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். பல பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போனது.
இதற்கிடையில், படம் ரிலீஸ் தள்ளிப் போவது குறித்து, இயக்குநர் வெங்கட் பிரபு, டுவிட்டரில் தன்னுடைய வேதனையை சொல்லியிருந்தார். படத்தில் எவ்வித அரசியலும் கிடையாது. முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படம். அரசியல் கிடையாது என்று சொல்லியும், அரசியல்வாதிகள் படத்தை இப்போதைக்கு வெளியிடக் கூடாது. தேர்தலெல்லாம் முடிந்த பின் வெளியிட்டுக் கொள்ளலாம் என எச்சரிக்கும் பாணியில் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, பட ரிலீசை தள்ளிப் போட்டு கொண்டே வந்தது தயாரிப்புக் குழு. இந்நிலையில் படத்தை நெட் பிளிக்ஸில் வெளியிட முடிவெடுத்தனர். திரையரங்குகளில் வெளியிடாமல், நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். வெளியிட்ட சில மணி நேரங்களில் பைரசி இணையதளம் படத்தை வெளியிட்டு விட்டது. இதனால், வெறுத்துப் போன நெட் பிளிக்ஸ் நிறுவனம், தன்னுடைய தளத்தில் இருந்து ஆர்.கே.நகர் படத்தை நீக்கி விட்டது.
இதே நிலைமை நீடித்தால், மொத்த சினிமா உலகமும் அழிந்து போகும் என, வெங்கட் பிரபு கதறுகிறார்.