Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்துக்கள், இஸ்லாமியர்களின் ரத்த சொந்தங்கள்: ராஜ்கிரண்

18 டிச, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Muslims-are-blood-relation-to-Hindus-says-Rajkiran

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலம் காலமாக புளித்துப்போன விசயம். இஸ்லாமியர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும், பாமர மக்களின் மனங்களில் பிரிவினையை உண்டாக்குவதற்கான, நச்சுக்கருத்துக்களை, காலங்காலமாக விதைத்து வந்தனர், வருகின்றனர்.

இந்த பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு காலத்திலும் செல்லுபடியாகாது. சத்தியத்தை யாராலும் புதைத்து விட முடியாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள். தீண்டாமை போன்ற, இன்ன பிற கொடுமைகளால், அந்த வாழ்க்கை முறையிலிருந்து தப்பித்து, சுய மரியாதையைப் பேணவும், சமத்துவத்தை அனுபவிக்கவும், அதற்கு வழி வகுத்துத் தந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு மாறியவர்கள்.

ஒவ்வொரு மனிதனும், தனக்குப்பிடித்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவனுடைய அடிப்படை சுதந்திரம். இதை இந்திய அரசியல் சாசன சட்டம் உறுதி செய்திருக்கிறது. ஒரே தாய், தந்தையருக்கு பிறந்த பிள்ளைகள், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லையா, அதே போலத்தான் இதுவும்.

எல்லா மதத்தினரும் இந்திய தேசத்தின் பிள்ளைகளே. என் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச் சீமையின் மறவர் குலம். என் தாயாரின் மூதாதையர்கள், சேதுபதிச் சீமையின் மீனவர் குலம். எனது மூதாதையர் காலத்தில், சேதுபதிச் சீமையில் 18 சாதிகள் இருந்தது என்றும், அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறி, சாதிகளற்று, சம்பந்தம் பண்ணிக் கொண்டார்கள் என்றும், என் தாயார் எனக்கு சொல்லியிருக்கிறார்கள். அதனால், எல்லா சாதியிலும் எனக்கு சொந்த பந்தங்கள் உண்டு. பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு. அதில் மனித நேயமே மாண்பு.

இவ்வாறு ராஜ்கிரண் எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
வைர விழா கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்வைர விழா கொண்டாடும் தயாரிப்பு ... சினிமா உலகம் அழிந்து போகும்: வெங்கட் பிரபு சினிமா உலகம் அழிந்து போகும்: வெங்கட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 டிச, 2019 - 09:52 Report Abuse
skv srinivasankrishnaveni இந்தியாலே இருக்கும் எந்தமுஸ்லிமுமே ஒரிஜினல் முஸ்லீம் இல்லிநம்மை ஆனதா முஸ்லீம் மன்னர்களேதான் கம்பெல் பண்ணி மதமாற்றின பஞ்சம்பிழைக்கவே பாரதம் வந்தானுக என்றும் நாங்கள் பியூர் ஹிந்துக்கள் குரல்கொடுத்தால் போதும் பாகிஸ்தானோ வேறு தேசமோ உங்கள்ள எவனையும் அண்டவே விடமாட்டானுகய்யா இதுதான் சத்தியம் .உலகின் எந்தமூலைக்கும் போங்க உங்களை இந்திய முஸ்லீம் என்றுதான் முத்திரை குத்துறானுக மதமாறிய கிறிஸ்துவனுக்கும் முஸ்லீம்களுக்கும் இதுதான்யா மூலம் மறக்காதீங்க உனக்கும் மற்ற எல்லாமுஸ்லிம் அண்ட் கிறிஸ்துவாளுக்கும் மூலமே இந்து தான் என்பது தெரிஞ்சுக்குங்க
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
22 டிச, 2019 - 17:02 Report Abuse
a natanasabapathy Athanaal thaan mumbaiyil kundu vaithu ratham sintha vaitharkalaa muslimkallum sunny shiya labbai marokar yena Pala pirivukall undu yenbathu rajkiranukku theriyathaa Iran Iraq sunny shiya mothikkolvathu ivar ariyathathaa
Rate this:
I love Bharatham - chennai,இந்தியா
22 டிச, 2019 - 14:35 Report Abuse
I love Bharatham இந்துக்களை ஏமாற்றுவதே காலம் காலமாக நீங்கள் செய்யும் வேலை. எங்களுடைய விட்டு கொடுக்கும் குணம் உங்களுக்கு வசதியாக போயிற்று
Rate this:
Ayappan - chennai,இந்தியா
22 டிச, 2019 - 13:53 Report Abuse
Ayappan then why you guys are insisting the Muslim from neighboring countries those who are all shia, Sunni, ahmedia etc., are they another form of Islamic ism. Come and your mouth and answer this question. Why there is fight in Islamic countries. Don't tell me America is reason and all. Please don't fool your self.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21 டிச, 2019 - 10:43 Report Abuse
Malick Raja அணைத்து சாதிகளிலிருந்தும் தான் முஸ்லீம் வந்தது என்பது உண்மை அதை சொல்லவேண்டியதில்லை காரணம் அறிவுடைமை .. முஸ்லிம்களில் சாதிகள் இல்லை .. கருத்துக்கள் வேறுபாட்டால் 1%.மட்டும் தனிமையில் இருக்கின்றனர் உணர்ந்தபின் ஒன்றாவது உண்மை . பலவிதமான உண்மை வரலாறுகளில் இந்தியர்கள் என்ற ஒரே மதம் என்றோ இருக்கிறது அதை பிரிப்பதில் பலனில்லை என்பது இப்போதாவது குறைந்த பட்ச அறிவுடையாரால் அறியமுடியும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 டிச, 2019 - 16:28Report Abuse
skv srinivasankrishnaveniஅன்று அடிச்சு உதைச்சு மாரவச்சானுக பாப்ரலேந்து வுரங்கஜீப் வரை ஆங்கிலேயனால் வந்தது கிறிஸ்துவின்மேதம். இந்துக்களுக்குத்தான் இந்தியாலே முதல்ல இடம் எல்லாகிறிஸ்துவமிஷினரி நடத்தும் பள்ளிகளையும் இழுத்துமூடுங்க இந்தியப்பெற்றோகள் எல்லாம் இந்துக்களுக்கே ஆனஇந்தியப்பள்ளிகளேதான் என்றுகூவுவோம்...
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in