அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா, கிச்சா சுதீப் நடித்துள்ள படம் ‛தபங் 3'. இதனை சல்மான்கான் தயாரித்துள்ளார். படம் வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. இதன் புரமோசனுக்காக சென்னை வந்த சல்மான்கான் நிருபர்களிடம் கூறியதாவது:
வாண்டட் படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் இங்கு சென்னையில் நடந்தது. பின் விக்ரமின் ‛சேது'வை ரீமேக் செய்து நடித்தேன். எப்போதும் தென்னிந்திய படங்களை ரீ-மேக் செய்வதில் எனக்கு அதிக ப்ரியம் உண்டு. நடிகராக மாறுவதற்கு முன்பு ஒரு விளம்பரபடத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். சென்னை பற்றி நிறைய நல்ல நினைவுகள் உள்ளது.
எனக்கு பிரபுதேவாவை பற்றி தெரியும் அவர் வேலை செய்யும் விதம் எனக்கு பிடிக்கும். என்னை நன்றாக ஆட வைப்பார், காமெடி செய்ய வைப்பார். அதனால் இந்தப்படத்திற்கு அவர் இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தோம். அதனால் அவரை அழைத்து தபங் 3ஐ இயக்கச் சொன்னேன். அவர் மிகவும் நல்ல மனிதர். அவருடன் அடுத்த படமும் செய்கிறேன்.
இந்தப்படத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் வேலை செய்திருக்கிறார்கள். இது உங்கள் படம். அங்கு இப்போது நிறைய தமிழ் படங்கள் வெற்றி பெறுகிறது. ரஜினி, கமல், விக்ரம் படங்கள் அங்கே பெரிய வெற்றி பெறுகிறது. பாகுபலி, எந்திரன் படங்களை நாங்கள் ரசிக்கிறோம். அதுபோல தபங் உள்ளிட்ட எங்களது படங்களையும் நீங்கள் ரசிக்க வேண்டும். வெற்றி பெற வைக்க வேண்டும். என்றார்.
பேசி முடித்து விட்டு மேடையிலேயே ஒரு ஆட்டத்தைப் போட்டார் சல்மான்.