Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' சாதனையை நெருங்க முடியாத 'தர்பார்'

17 டிச, 2019 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Darbar-Trailer-did-not-break-Bigil-trailer-record

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் பட டிரைலர்கள் வெளியாகும் போது அவை புதிய சாதனையைப் படைக்குமா என்ற ஆர்வம் அவர்களது ரசிகர்களுக்கு இருக்கும். தமிழ் சினிமாவில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து விஜய் நடித்த 'பிகில்' படம் புதிய சாதனைகள் சிலவற்றைப் படைத்தது.

'பிகில்' டிரைலர் 2 மணி நேரம் 45 நிமிடங்களில் 1 கோடி பார்வைகளையும், 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்குள்ளாக 20 லட்சம் லைக்குகளைப் பெற்று இதற்கு முன்பு இந்தியத் திரையுலகத்தில் ஷாரூக்கான நடித்த 'ஜீரோ' பட லைக்குகள் சாதனையை முறியடித்தது.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அது 'பிகில்' பட டிரைலரின் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அந்த சாதனையை 'தர்பார்' டிரைலரால் நெருங்கக் கூட முடியவில்லை. எனவே, தயாரிப்பு நிறுவனம் மூன்று மொழிகளின் ஒட்டு மொத்த பார்வை எண்ணிக்கை, லைக்குகள் ஆகியவற்றை மட்டுமே தற்போது பதிவிட்டு வருகிறது.

'தர்பார்' டிரைலர் மூன்று மொழிகளிலும் சேர்த்து 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ் டிரைலரைவிட ஹிந்தி டிரைலர் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. மூன்று மொழிகளிலும் லைக்குகளின் எண்ணிக்கை 7 லட்சத்தை மட்டுமே கடந்துள்ளது.

விஜய் பட சாதனையை விஜய் மட்டும்தான் முறியடிக்க முடியும் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி கெட்டப்புக்கு மாறிய தனுஷ்ரஜினி கெட்டப்புக்கு மாறிய தனுஷ் அலெக்ஸ் பாண்டியனை அடிச்சித் தூக்குவாரா ஆதித்யா அருணாச்சலம் ? அலெக்ஸ் பாண்டியனை அடிச்சித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
19 டிச, 2019 - 09:43 Report Abuse
Thalaivar Rasigan சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் 90 % இருக்கின்றனர். ரஜினியின் ரசிகர்களோ ரொம்பவும் குறைவு. மிஞ்சி போனால் தான் 20 % சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். களத்தில் அதிகம் இருப்பார்கள். 50 % ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வந்தாலே, எல்லா செய்திகளிலும் அதிரும்படி செய்துவிடுவார்கள்.
Rate this:
R.Subramanian - Chennai,இந்தியா
19 டிச, 2019 - 09:30 Report Abuse
R.Subramanian Youtube 2018 top tring videos அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது அதில் இருக்கும் ஒரே தமிழ் நடிகர் ரஜினி மட்டும் தான். ரஜினியின் 2.0 ஹிந்தி இரண்டாம் இடத்திலும் காலா 5 ம் இடத்திலும் உள்ளது பீகிள் சர்க்கார் எல்லாம் youtube லிஸ்டில் கிடையாது. இதில் இருந்து தெரிவது பீகிள் சர்க்கார் போன்ற படங்களுக்கு போலியாக லைக் போட்டு இருக்கிறார்கள். அது உண்மையான லைக் அல்ல
Rate this:
krishna -  ( Posted via: Dinamalar Android App )
18 டிச, 2019 - 10:17 Report Abuse
krishna 1) காசு கொடுத்து படம் ஒட்டுவது இப்போ Likes and viewers.2) எல்லாருக்கும் சேர் பண்ணா Views அதிகமாக தான் வரும்.ரஜினி ரசிகர்களுக்கு வேலை இருக்கு.
Rate this:
JMK - Madurai,இந்தியா
18 டிச, 2019 - 18:13Report Abuse
JMKசரியான பதிவு கிருஷ்ணா சார் ? இந்த விஜய் / அஜித் ரசிகர்களுக்கு வேறு உருப்படியான வேலையே கிடையாது ? வியூஸ் / லைக் போடுவதிலும் நேரத்தை வீண் அடிக்கிறார்கள் ? இப்படி ஓவர் பில்ட் அப் கொடுத்துதான் பீகிள் மொக்க வாங்கி கைதியிடம் படு தோல்வி அடைந்த பின்னாடியும் விஜய் ரசிகர்கள் தொல்லை தாங்க முடியல ?...
Rate this:
JMK - Madurai,இந்தியா
18 டிச, 2019 - 18:21Report Abuse
JMKஇந்த வயதில் (எழுபது ) இந்த சாதனையே பண்ணுவது தலைவர் மட்டுமே ? விஜய் / அஜித் இன்னும் பத்து வருடங்கள் நீடிப்பார்களா இந்த சினிமா துறையில் ?...
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
18 டிச, 2019 - 09:13 Report Abuse
Thalaivar Rasigan போட்ஸ் மூலம் லைக்ஸ் - பார்வைகளை அதிகம் செய்ய முடியும்
Rate this:
VKC - CBE,இந்தியா
18 டிச, 2019 - 10:43Report Abuse
VKCOk ok.. thalli poi vilayadu pa.....
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
18 டிச, 2019 - 09:12 Report Abuse
Thalaivar Rasigan போட்ஸ் மூலம் லைக்ஸ் - பார்வைகளை அதிகம் செய்ய முடியும் என்பது மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் மூலமே வெளிவந்தது. விஜய் படம் எப்போவும் அப்படிதான். ஆனால் யு டியூப் ட்ரெண்டிங் மூலம் செக் செய்தால் தெரியும். போட்ஸ் மூலம் அதிகம் செய்வது யு டியூப் ட்ரெண்டிங்கில் வராது.
Rate this:
VKC - CBE,இந்தியா
18 டிச, 2019 - 10:45Report Abuse
VKCஅது தா அண்ணாத்த சொல்லிட்டாருல்ல விடுங்கப்பா பாவம் ......
Rate this:
JMK - Madurai,இந்தியா
18 டிச, 2019 - 18:15Report Abuse
JMKஇதுக்கு ஒரு (VKC) சப்போர்ட் வேற விளங்கிடும் ?...
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in