டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்த இருக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி கோடீஸ்வரி. இதில் பெண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் பெண்களை ஆடிசன் செய்து, அதிலிருந்து 120 பேரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நிகழச்சி வருகிற 23ந் தேதி முதல், திங்கள் - வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த ஷோவின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு தொகுப்பாளினி ராதிகா சரத்குமார் பேசியதாவது: நான் 40 வருடங்களாக, சினிமாவில் நடித்து வருகிறேன். 15 வருடங்களாக சின்னத்திரையிலும் நடித்து வருகிறேன். படம் தயாரித்திருக்கிறேன். தொடர் இயக்கி இருக்கிறேன். இப்போது கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினி ஆகியிருக்கிறேன்.
இது பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் ஒத்துக் கொண்டேன். தொகுப்பாளினியாக பணியாற்றுவது சவால் ஆனது. காரணம் நான் நானாக இருக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். அதனால் இந்த சவால் எனக்கு பிடித்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதை அமிதாப்பச்சனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர்தான் எனக்கு குரு. என்னை வாழ்த்தியும் இருக்கிறார் என்றார்.