Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி

16 டிச, 2019 - 12:41 IST
எழுத்தின் அளவு:
pregnant-fan-meets-rajini-on-darbar-shooting-sopt

ரஜினி, தற்போது தர்பார் படத்தில் விட்டுப் போன காட்சிகளை முடிக்கும் பணியில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரஜினி வளையல் அணிவிப்பது போன்ற போட்டோ ஒன்று நேற்று வைரலானது. இதனையடுத்து யார் அந்த பெண் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலவ துவங்கியது.


இந்த போட்டோ பற்றி விசாரித்த போது, ரஜினியுடன் அந்த போட்டோவில் இருந்த ரசிகர், இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை விவரித்தார். தினமலர் இணையதளத்திற்காக தொலைப்பேசி மூலம் அவர் அளித்த பேட்டி விபரம் :


எனது பெயர் ராகவா விக்னேஷ். எனது மனைவி பெயர் ஜெகதீஸ்வரி. நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் என் அப்பா, நான் என அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். எனக்கு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. எங்கள் வீடு முழுவதும் ரஜினி படம் தான் இருக்கும். எனது மனைவியும் ரஜினி ரசிகர் தான்.பிறகு கர்ப்பமான எனது மனைவியிடம் என்ன ஆசை உள்ளது என கேட்டேன்.


தனக்கு ரஜினியை பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என கூறினார். அவர் கர்ப்பமாகி 4வது மாதத்தில் இருந்து ரஜினியை சந்திக்க அபாயின்மென்ட் கேட்டிருந்தேன். தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக என் மனைவி கர்ப்பமடைந்திருப்பதை யாரிடமும் சொல்லவில்லை. தர்பார் பட சூட்டிங்கின் கடைசி நாளில் ரஜினியிடம் நான் அபாயின்மென்ட் கேட்டது பற்றி கூறி உள்ளனர்.


தற்போது என் மனைவிக்கு 9வது மாதம். இந்த தகவலை கூறியதும் திட்டிவிட்டு, உடனடியாக வர சொல்லுங்கள் என ரஜினி சொல்லி உள்ளார். சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றோம், அப்போது நடித்துக் கொண்டிருந்த ரஜினி, என் மனைவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து, கையெடுத்து கும்பிட்டபடி எங்களிடம் வந்து பேசினார். நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினோம். அப்போது என் மனைவி கையில் எடுத்துச் சென்றிருந்த வளையலை கொடுத்து, அப்பா ஸ்தானத்தில் இருந்து இந்த வளையலை எனக்கு போட்டு விடுங்கள் என கேட்டார்.


உடனே அவரே வளையலை வாங்கி இரு கைகளிலும் போட்டு விட்டார். அது சொல்ல முடியாத சந்தோஷம். இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். நான் கேமிராமேனாகவும், போட்டோஷாப் டிசைனராகவும் உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று ... தர்பார் டிரைலர் இன்று - 'பிகில்' சாதனையை முந்துமா ? தர்பார் டிரைலர் இன்று - 'பிகில்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எல்லாம் சொல்லிட்டு போட்டோஷாப் தொழில் ன்னு சொல்றாரே
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 டிச, 2019 - 18:06 Report Abuse
Vasudevan Srinivasan சூப்பர்ஸ்டாரின் சூப்பர் செண்டிமெண்ட்..
Rate this:
Suri - Chennai,இந்தியா
16 டிச, 2019 - 17:40 Report Abuse
Suri "அப்பா ஸ்தானத்தில்" இருந்து..... அப்படியே புல்லரிக்குது... கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் போடுவது.. அதுவும் குடும்பத்தை சாராத வேற்று மனிதர் வளையல் போடுவது என்பது.. தமிழ் கலாச்சாரத்திக்கு புதிது..... என்னவோ ...... இவர் நடவடிக்கை ஒன்றும் சரியில்லை.....
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 டிச, 2019 - 16:34 Report Abuse
skv srinivasankrishnaveni ஒரு கர்ப்பிணியின் ஆசை அதை அவர் செய்துள்ளார் தப்பாக தெரியலியே குற்றம் என்று எண்ணியே எதையும் நோக்கினால் சர்வம் தவராகவேதான் தெரியும் பலரும் ரஜினிக்கு ரசிகாஎன்று இருக்காங்களே அவாளும் அதுபோல தானே என்னாத்துக்கு அரசியல் சாயம் பூசணும்
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
16 டிச, 2019 - 16:24 Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இதுக்கு கருது அய்யா நீர் உன் ரசிகர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்கக்கூடாது என்கிறீர் அவர்கள் வோட்டு ஆவது போடலாமா இல்லை போடகூடாத இல்லை அவர்கள் தமிழ்நாட்டிலே இருக்கலாமா இல்லை உன்னை போல வேறு மாநிலம் போகணுமா விளக்க சொன்ன நலமா இருக்கும்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in