Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ்

15 டிச, 2019 - 17:38 IST
எழுத்தின் அளவு:
3-generation-singers-from-yesudas-sang-for-shyamaragam

கே.ஜே.யேசுதாஸ், அவருடைய மகன் விஜய் யேசுதாஸ், அவருடைய மகள் அமயா விஜய் யேசுதாஸ் என மூன்று தலைமுறையும் இணைந்து தட்சிணாமூர்த்தி இசையில் பாடிய " ஷியாமாராகம்" மலையாள படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது.


இந்த விழாவில், இதில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன், சுதா மகேந்திரன், இவர்களின் மகள் மதுவந்தி,பின்னணி இசையமைத்த சரத், விஜய் யேசுதாஸ், அமயா, இயக்குனர் சேது இயாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் இணை தயாரிப்பாளர்கள் கண்ணன், பினோஜ் திருமதி.தட்சிணாமூர்த்தி, தயாரிப்பாளரும் பி .ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.


விழாவில் யேசுதாஸ் பேசுகையில், " பகவான் கொடுத்த வரபிரசாதம்தான் நான் இன்னமும் பாடிக் கொண்டிருப்பது. குருவை என்றும் மறக்க கூடாது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கும்." என்று வாழ்த்தினார்.


ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், " இந்தப் படத்தில் பாகவதராக நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வேடத்தை சிபாரிசு செய்தவர் யேசுதாஸ் அவர்கள் தான். எனக்காக அருமையான ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார். அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்" என்று பேசினார்.


உலகிலேயே 3 தலைமுறையினர் பாடல் பாடிய ஒரே படம் ஷ்யாம ராகம்.தமிழில் பார்த்த விழி பார்த்த என்ற பெயரில் இப்படம் வெளியாக உள்ளது.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : ... கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 டிச, 2019 - 18:14 Report Abuse
Vasudevan Srinivasan 'தெய்வீக குரலோன்' கே ஜெ யேசுதாஸ் அவர்களின் மகன் மற்றும் பேத்தி என்ன அவரது பரம்பரைக்கே இசை ஆசி வழங்கியிருப்பார் 'சபரி கிரீசன்' ஸ்ரீ ஐயப்பன்..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 டிச, 2019 - 18:12 Report Abuse
Vasudevan Srinivasan சிந்து பைரவி படத்தின் தொடர்ச்சியான ஜெயா டிவியின் புகழ் பெற்ற தொடரான இயக்குனர் சிகரமே இயக்கிய 'சஹானா' தொடரின் நீட்சியாக (வெற்றியில்) அமையட்டும் ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கு..
Rate this:
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
16 டிச, 2019 - 08:40 Report Abuse
Gopal வாழ்க வளமுடன் & நலமுடன் அய்யா . God bless your family abundantly.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in