Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்

15 டிச, 2019 - 17:29 IST
எழுத்தின் அளவு:
i-am-in-stress-:-raghava-lawrence

நடிகர் ராகவா லாரன்ஸ், தர்பார் ஆடியோர வெளியீட்டு விழாவில் கமல் பற்றிய பேசியது தொடர்பாக, கமலை நேரில் சந்தித்து நேற்று விளக்கம் அளித்தார். அவர் கமலிடம் பேசியதையும், கமலுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று (டிச.,15) மற்றொரு டுவிட்டை பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பது,


நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்வைத்தான் தவறாக பேசி கொண்டிருந்தார்கள். இப்போது தாய் தந்தையரைப் பற்றியம் மிக தவறாக பேசுகிறார்கள். மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.


நான் ஒரு தனி மனிதன். எனக்கென்று தனிக் கூட்டமில்லை. நான் படிக்காதவன். ஒரு தனி மனிதனாய் நின்று, "அன்புதான் தமிழ்" என்கிற அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். இந்த அமைப்பின் மூலம், தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும், தமிழரின் அன்பையும் உலகறிய செய்வதே அதன் நோக்கம்.


இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல் என்பது திருக்குறள். அதை பற்றியே...எதிரிக்கும் உதவி செய். பிறர் துன்பங்களை உன் துன்பயமாக நினை. நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு. உள்ளதால் ஒன்றே. கடவுளை வெளியே தேடாதே உனக்குள் இருக்கிறார். எனக்கு இது போதும் என்று நினை ஆசையை விடு. அள்ளிக்கொடு. ஆண்டவன் உன் பக்கம்.


அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால், தர்மம் இருப்பது உண்மையானால் என் வழி உண்மையானால் நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கும்.


இறுதியாக ஒன்று...என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன்தொடையை காண்பித்து போஸ் கொடுத்த ... யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

17 டிச, 2019 - 07:56 Report Abuse
மிட்டாய் வந்தோமா நல்லா நடிச்சோமா .. முடிஞ்சா நாலு நல்ல சினிமா செஞ்சோமான்னு இல்லாம .. காமெடிங்குற பேருல பொண்ணு இடுப்பு மேல ஏறிக்குறது .. மக்கள் சூப்பர் ஸ்டார் னு கூவறது ... சாணி அடிச்சேன்னு சபையில உளறிட்டு இப்போ சப்பகட்டு கட்றீயே லாரன்ஸ் ... உஞ்சத்துக்கு இதெல்லாம் தேவையா ???
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
16 டிச, 2019 - 18:27 Report Abuse
சோணகிரி இது உலக்கை நாயகனின் மொக்கையால் ஏற்பட்ட மனஉளைச்சலாக இருக்கும்...
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16 டிச, 2019 - 16:45 Report Abuse
skv srinivasankrishnaveni யாகாவாராயின் நாகாக்க என்று உள்ளக்குறளையும் சிந்திக்கவும் திரு லாரன்ஸ் . எனக்கு உம்மை மதம் பேச்சு எதுவும் தெரியாது எனக்குதெரிஞ்சுது நீ ர் ஒரு மனிதநேசம் உள்ளவர் என்பது மட்டுமே ப்ளீஸ் அதையே செய்யுங்கள் உங்க ஜோலி என்ன நடிப்பு மெய்ன் ஸமூஹ சேவை போதுமே என்னாத்துக்கு அனாவசிய பேச்சுக்கள் அதனால் வரும் மனஉளைச்சல் ETC
Rate this:
16 டிச, 2019 - 16:45 Report Abuse
ஸாயிப்ரியா அறியாத வயசு கமல் ஏன்று தெரிந்த வயசு சாணி என்று கைக்கு தெரிந்த வயசு மேடையில் பேசும் போது தவறு என்று தெரிந்தும் சரிதான் என்பதுபோல் நா காக்காமல் பேசிய வயசு? சரியா? கால்கள் நடமிடலாம் நாக்கு நடமிடலாமா?
Rate this:
Tamil - chennai,இந்தியா
16 டிச, 2019 - 15:00 Report Abuse
Tamil நீ உன்ன பேச சொன்ன வந்தேறி பரட்டை அனகொண்டா விஷால் உனக்கு சமூக சேவை செய்ய ஸ்ரீ ரெட்டி எல்லாம் ஆந்திரா தெலுங்கானா சென்று உங்கள் சொந்த பந்தங்களுக்கு உதவுங்கள். தமிழர்கள் தமிழ்நாட்டை கவனித்து கொள்வார்கள். சிவாஜி ராவ் தெலுங்கானா விஷால் ரெட்டி ஆந்திராவிற்கு சென்றால் அவர்கள் மணவாடு என்று உங்களுக்குள் ஒரேய குதுகுலமாக இருக்கும் அதை விடுத்தது உனக்கு சம்பந்தம் இல்லாத தமிழக அரசியலில் இந்த கோல்டிகளுக்கு என்ன வேலை ? திமுக கட்சியில் இருக்கும் தமிழர்களை மாட்டி விட்டு தெலுங்கர்களை காப்பாற்றுகிறது. துறைமுருகன் மகனுக்கு நடத்த கதை அது போல விடுதலை புலிகளால் சோனியாவிற்கு ஆபத்து என்பதை நேரு மூலமாகவோ அல்லது சுப்பா ரெட்டி KKSSR மூலமாக அறிவிக்கை விடாமல் TR பாலு மூலமாக அறிக்கை விதத்தில் நோக்கம் ???? தமிழர்களுக்குள் அடிச்சிக்கணும் தெலுங்கர்கள் சம்பாதிக்கணும். நித்தியானந்தா செய்ஞ்சா மாத்ரி சாய்பாபா வ செய்யமுடியுமா ??? நித்தியானந்தா தெலுங்கு சாமியாராக இருந்தால் விசயம் வெளிய வராது. தெலுங்கர்கள் தமிழகத்தில் ஊடுருவ முக்கிய காரணம் திமுக என்று பலரும் பேசுவது கேட்கமுடிகிறது
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in