‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஹிந்திப் படங்களுக்கும், ஹிந்திப் பாடல்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் வரவு ஹிந்திப் படங்களுக்கும், இளையராஜாவின் வருகை ஹிந்திப் பாடல்களுக்கும் ஒரு முடிவைக் கொடுத்தது.
இப்போது தமிழ்நாட்டில் மீண்டும் ஹிந்திப் படங்களின் வருகை அதிகமாகிவிட்டது. இருந்தாலும் அவற்றை ஹிந்திப் படங்களாக மட்டும் வெளியிடாமல் தமிழில் டப்பிங் செய்து ரசிகர்களைக் கவர முயற்சி செய்கிறார்கள். அந்த வரிசையில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்கா மற்றும் பலர் நடித்துள்ள 'தபங் 3' படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள 'தபங் 3' டப்பிங் படத்திற்கு நேரடி தமிழ்ப் படங்களான 'தம்பி, ஹீரோ' ஆகிய படங்களுக்குப் போட்டியாக பல தியேட்டர்கள் கிடைத்துள்ளன. பிரபல தயாரிப்பாளர்களைப் பிடித்து அவர்கள் மூலம் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடும் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். 'தபங் 3' படத்தை வெளியிடும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் 'ஹீரோ' படத்தையும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.