Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2019ல் ஓவியா - இமேஜைக் கெடுத்த ஒரே படம்

14 டிச, 2019 - 13:28 IST
எழுத்தின் அளவு:
90-ml-movie-affects-image-of-oviya

2010ல் வெளியான 'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரவில்லை.


2017ம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். அந்த புகழைப் பயன்படுத்தி அவரால் பெரிய வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. அதனால், கடந்த 2018லும் அவரால் ஒரு தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடிக்க முடியவில்லை.


இருப்பினும் 'பிக் பாஸ்' புகழை வைத்து அவரை தன் 'காஞ்சனா 3' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க வைத்தார் ராகவா லாரன்ஸ். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே ஓவியா முதன்மைக் கதாநாயகியாக நடித்த '90 எம்எல்' படம் வெளிவந்தது. ஓவியாவுக்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல இமேஜை அந்த ஒரே ஒரு படம் உடைத்தெறிந்தது.


பின்னர் வந்த 'சீனி, களவாணி 2' ஆகிய படங்களும் ஓவியாவுக்குக் கை கொடுக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டில், ஓவியா நடித்து '90 எம்எல், கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, சீனி, களவாணி 2' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புதுமுகங்கள் உருவாக்கும் க்ரைம் த்ரில்லர் லோகாபுதுமுகங்கள் உருவாக்கும் க்ரைம் ... நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதி நெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vittal Anand - Chennai,இந்தியா
17 டிச, 2019 - 02:08 Report Abuse
Vittal Anand மிக செயற்கை.
Rate this:
14 டிச, 2019 - 17:53 Report Abuse
young prince oviya very beautiful
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in