ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், படத்தின் கதையை முடிவு செய்து கொண்டு, அதை என்னுடைய நான் கு நண்பர்களுக்கு சொல்வேன். அவர்கள் ஓ.கே., என்றால் படத்தை எடுக்க ஒப்புக் கொள்வேன் என இயக்குநர் சசீந்திரன், தன்னுடைய படங்கள் வெற்றியடைவது குறித்து கூறியிருக்கிறார்.
அவர் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து, மேலும் கூறியிருப்பதாவது:
வெண்ணிலா கபடி குழு பத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. படத்தின் நாயகனான விஷ்ணு விஷாலின் அப்பா, அப்போது தமிழக போலீசில் ஐ.ஜி., அந்தஸ்தில் பணியில் இருந்தார்.
கிரவுண்டில், விஜய் சேதுபதி, சூரி, விஷ்ணு விஷால் என எல்லோரும் சேர்ந்து ஓட வேண்டும். காட்சி அமைப்புகள் அப்படியிருக்க சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ரிகர்ஷல் ஷாட் எடுத்துக் கொண்டு இருந்தோம். விஷ்ணு விஷால் அப்பா ஷூட்டிங் பார்க்க வந்து இருந்தார். அப்போது தனது மகனை அடையாளம் தெரியாமல், இதில் யார் என் மகன் என்று கேட்டார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. விஷ்ணு விஷால் கேரக்டராகவே மாறிவிட்டார். அதனாலேயே என்னால் உடனடியாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். எனக்கு திரைக்கதை இயக்கத்தில் கே. பாக்கியராஜை பிடிக்கும், பாடலை படமாக்குவதில் மணிரத்னத்தைப் பிடிக்கும். பாலாவின் கதை ராவா இருந்தாலும் இயக்கம் லைவா இருக்கும்.
எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் விளையாடி விட்டு வந்தால், சிறுபிள்ளை மாதிரி ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். அடிக்கடி கிரவுண்டில் விளையாடிவிட்டு வருவது, எனக்கு பிடித்தமான விஷயம்.அதனால்தான் என்னுடைய படங்களிலும் ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறது.
இவ்வாறு சுசீந்திரன் தன்னுடைய சினிமா அனுபத்தை கூறியிருக்கிறார்.