கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி உள்ள படம் கேப்பாரி, ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை இந்தப் படம் வெளிவருகிறது. இது அடல்ட் காமெடி படம். இந்த படத்திற்கு தடைகேட்டு வெளிநாடு வாழ் இந்தியரான பிரமானந்த் சுப்பிரமணியம் என்பவரது சார்பில் சிதம்பரம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த டிராபிக் ராமசாமி படத்தின் விநியோக உரிமைக்காக எங்களிடம் 20 லட்சத்து 20 ஆயிரம் பெற்றிருந்தார். பின்னர் இந்த உரிமையை ரத்து செய்து விட்டு இன்னொருவருக்கு கொடுத்தார். எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. எனவே எங்கள் பணத்தை திருப்பித் தந்த பிறகே கேப்மாரி படத்தை வெளியிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் " என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. "கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக" அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை தொடர்ந்து படத்துக்கு தடைகேட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.