Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா - அம்ருதா தம்பதிகளுக்கு விவாகரத்து

11 டிச, 2019 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Actor-Bala---Amrutha-got-divorce

‛வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்' படங்களை இயக்கிய சிவாவின் தம்பி பாலா. தமிழில் ‛அன்பு' படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பின்னர் மலையாள சினிமாவுக்கு சென்ற பாலா, அங்கும் சொல்லிக்கொள்ளும் படியான படங்களில் நடித்தார். வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாகவும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளிவந்த மோகன்லாலின் லூசிபர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

பாலாவும், கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்தனர். 2010ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. பாலாவுக்கும், அம்ருதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் பிரிந்து தனித்தனியாக வசித்தனர்.

பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு பாலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது நீதிமன்றம். மகள் அவந்திகா தாயுடன் இருக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கத்தி கதை வழக்கு: விஜய் விடுவிப்புகத்தி கதை வழக்கு: விஜய் விடுவிப்பு முதல்வருடன் ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு ஏன்? முதல்வருடன் ராகவா லாரன்ஸ் திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12 டிச, 2019 - 06:28 Report Abuse
skv srinivasankrishnaveni ரொம்பவேமுக்கியம் நாட்டின் முதல் அம்சமா இந்த கொடூரமான விவாக ராதது போங்கடா புண்ணாக்கு வேந்தர்களா
Rate this:
s t rajan - chennai,இந்தியா
12 டிச, 2019 - 02:45 Report Abuse
s t rajan அறிவில்லாத சுயநலமிகள் ? கணவன் மனைவி பிரியலாம், ஆனால் இருவரும் இணைந்து தாய் தந்தையானதும் பிரியலாமா ? அவந்திகாவின் நிலைமை... அந்தோ பாவம். சினிமாவின் கொடுமை.... எத்தனை பேர்.. இந்தமாதிரி பின்னுதாரணம் ? ப்ரகாஷ் ராஜ், கமல்ஹாஸன், சரத் குமார், பார்த்திபன், ப்ரபுதேவா, இன்னும் எத்தனை பேர். இதில் சிலர் வீட்டை ஆளமுடியாட்டாலும் நாட்டை ஆளமுயற்சிக்கிறார்கள் ? பணம் இருப்பதால் தாக்கு பிடிக்கிறார்கள் . .... மனம்...மனம்..... ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in