Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛குயின் - இணைய தொடர் - முதல் அத்தியாயம் - ஓர் பார்வை

10 டிச, 2019 - 17:04 IST
எழுத்தின் அளவு:
How-is-Queen-webseries-Chapter-1


கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸின் முதல் அத்தியாயம் இன்று(டிச.,9) பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் யு-டியூபில் ஏற்கெனவே வெளியான இதன் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கம் என்பதாலும், ரம்யா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பதாலும் இந்த இணைய தொடர் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு சிறிதும் குறைவில்லாமல் இந்த தொடர் இருக்கிறது.

இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் இல்லை என கவுதம் மேனன் சொல்கிறார். அத்தியயாத்தின் முடிவில் அனிதா சிவகுமரன் எழுதிய தி குயின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது என டைட்டில் கார்டு போடுகிறார்கள். ஒரு பரபரப்புக்காகவும், விளம்பரத்திற்காகவும் இதை ஜெயலலிதாவின் பயோபிக் என செய்திகளைப் பரவவிட்டிருக்கிறார்கள். அதே சமயம், இது ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட நாவல் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.1999ம் ஆண்டு சிமி கார்வேல், ஒரு டிவிக்காக ஜெயலலிதாவை பேட்டி எடுத்தது இன்றும் பேசப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு டிவி பேட்டி மூலம் தான் இந்த குயின் ஆரம்பமாகிறது. குயின் ரம்யா கிருஷ்ணனிடம் அவருடைய பள்ளிப் பருவ வாழ்க்கையைப் பற்றி பேட்டியாளர் கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் ரம்யா. பேட்டிக்கு இடையிடையே, ரம்யாவின் பள்ளிப் பருவக் காட்சிகள் பிளாஷ்பேக்காக வந்து போகின்றன.

மிகப் பெரும் கான்வென்ட்டில் 10ம் வகுப்பு படிக்கிறார் ரம்யாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஸ்வாசம் அனிகா. பள்ளி மாணவிகளின் தலைவியாகவும் இருக்கிறார். பள்ளிக்கு லேட்டாக வரும் மாணவிகளிடம் கண்டிப்பாக இருக்கிறார். நன்றாக படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், அம்மாவிடம் நெருக்கமாக இல்லாமல் சண்டை போடுகிறார். அனிகாவின் அம்மா சோனியா அகர்வால், வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்று தெரியவில்லை. சினிமாவில் தன்னை விட மூத்த வயது நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தாலும் சோனியாவுக்குக் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு அதிக வருமானமில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டைச் சுற்றி சினிமாவில் நடனமாடும் பெண்கள், சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் தான் குடியிருக்கிறார்கள்.அனிகாவுடன் வீட்டில் பாட்டி (சார்மிளா), தம்பி ஆகியோர் தான் இருக்கிறார்கள். தன் மீது பாசமாக இருக்கும் பக்கத்தில் இருக்கும் சினிமா நடனப் பெண்மணிகள் தன்னைத் தொட்டுப் பேசுவதைக் கூட அருவெறுப்பாக நினைக்கிறார் அனிகா. இருப்பினும் தன் தோழி வீட்டு கொலுவுக்குக் கூட பக்கத்து வீட்டுப் பெண்ணின் தாவணி, கம்மல் வாங்கி அணிந்து கொண்டு செல்லும் நிலைமை தான் அனிகா குடும்ப நிலைமை. அப்படி ஒரு நாள் சென்ற போது ஒரு போட்டோகிராபர் அனிகாவின் அழகைப் பார்த்து நிறைய போட்டோக்களை எடுத்துத் தள்ளுகிறார்.காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையிலும் பள்ளிக்குச் செல்கிறார். படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அனிகா மீது, பள்ளித் தலைமையாசிரியை பாசமாக இருக்கிறார். 10ம் வகுப்பில் நன்றாகப் படித்து மாநிலத்தின் முதல் மாணவியாகத் தேர்வு பெறுகிறார். தொடர்ந்து படிக்க வேண்டும் என ஆசைப்படும் அனிகாவின் ஆசையில் மண் அள்ளிப் போடுகிறார் அம்மா சோனியா. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனிகாவிற்கு வந்திருப்பதாகவும், அதற்கு தான் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

தனக்கு நடிக்க விருப்பமில்லை, தொடர்ந்து படிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்கிறார் அனிகா. ஆனாலும், அவரால் வேறு எதுவும் செய்ய முடியாத நிலை. சிறந்த பள்ளி மாணவி விருது வாங்கும் நாளன்று, மகள் அனிகாவுடன், சோனியா சினிமா ஸ்டுடியோ செல்கிறார். அங்கு மேக்கப் அறையில் கண்ணாடி முன் உட்காரும் அனிகாவுக்கு கடவுளை வேண்டி மேக்கப் போட ஆரம்பிக்கிறார் மேக்கப் மேன்.அத்துடன் முதல் அத்தியாயம் முடிவடைகிறது. இன்னும் 11 அத்தியாயங்களை எடுத்து முடித்திருக்கிறார்களாம். சில அத்தியாயங்களை கவுதம் மேனனும், சில அத்தியாங்களை பிரசாத் முருகேசனும் சிலவற்றை இருவரும் சேர்ந்தும் இயக்கியிருக்கிறார்களாம்.

குயின் வேடத்தின் மூன்று வித காலகட்டங்களில் டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் அனிகா, அடுத்து சினிமா நடிகையாக அஞ்சனா, அரசியல் களத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முதல் அத்தியாயத்தின் முழு பலத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் அனிகா. ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு அடடா சொல்ல வைக்கிறது. கண்டிப்பு, வெறுப்பு, ஆசை, பாசம் என விதவித முகபாவங்களில் அசத்துகிறார்.அம்மா சோனியா அகர்வால், பாட்டி சார்மிளா, குட்டித் தம்பி, பக்கத்த வீட்டு மலர் என ஒவ்வொருவரும் சரியான தேர்வு.

தன் வாழ்க்கையின் பிளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கும் ரம்யா கிருஷ்ணன் தோற்றம், நரை விழும் நடுத்தர வயதுப்பெண் தோற்றத்தில் அமைந்துள்ளது. மிக அமைதியாக தன் கடந்த கால நினைவுகளை அசை போடுகிறார் ரம்யா கிருஷ்ணன்.

பார்ப்பதற்கு ஒரு இணையத் தொடர் போலவே இல்லை. ஒரு சினிமாவைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. இணையத் தொடர்களின் அடுத்த கட்ட நகர்வுக்கு இந்த குயின் பேருதவி புரியும் என எதிர்பார்க்கலாம்.பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆங்கில வசனங்கள் தான் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். அத்தியாம் வெளியாகும் போது ஆங்கில சப்டைட்டிலுடன் தமிழ் சப்டைட்டிலும் அதில் இடம் பெற வேண்டும்.

தலைவி, தி அயர்ன் லேடி படங்களின் தரம் இந்த குயின் இணைய தொடரை விட அதிகம் இருந்தால் தான் பேசப்படும். அவர்களுக்கு தனி சவாலை இப்போதே கொடுத்துவிட்டார் கவுதம் மேனன்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திருச்செந்தூர் முருகனை வழிப்பட்ட நயன் - விக்கிதிருச்செந்தூர் முருகனை வழிப்பட்ட ... ‛குயின்' - ஜெ., கதை அல்ல - கவுதம் மேனன் ‛குயின்' - ஜெ., கதை அல்ல - கவுதம் மேனன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
11 டிச, 2019 - 06:55 Report Abuse
vasumathi கதை அப்படியே ஜெ ஜெ கதைதான். வெப் சீரிஸ் என்பதால் பார்வைகள் கம்மியாக இருக்கலாம். அப்படி ஒன்றும் பார்க்க வேண்டிய ஒன்று அல்ல . நல்ல நகைச்சுவைகளை பார்த்து சந்தோஷமாக இருப்போம்.
Rate this:
tirou - EVRY,பிரான்ஸ்
11 டிச, 2019 - 02:17 Report Abuse
tirou விமர்சனம் என்று ஏன் கதையை சொல்லிறீகள் பிறகு ஏன் படம் பார்க்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in