Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மற்றுமொரு விவசாய படம்

10 டிச, 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Another-movie-based-on-Farmers

விவசாயம் தொடர்பான படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜெயம் ரவியின் ‛பூமி', சமுத்திரகனியின் ‛வெள்ளை யானை', அப்புக்குட்டி ஹீரோவாக நடிக்கும் ‛வாழ்க விவசாயி' உள்பட பல படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் புதுமுகங்கள் இணைந்து சிறிய பட்ஜெட்டில் ஒரு விவசாய படத்தை உருவாக்கி வருகிறார்கள். கடலில் கட்டுமரமாய் என்பது படத்தின் தலைப்பு.

ரக்ஷன், ரித்திகா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராம்ஜி இசை அமைக்கிறார், முனுசாமி தயாரித்திருக்கிறார். யுவராஜ் முனிஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கடலில் கட்டுமரம் தவிப்பதைபோல விவசாயிகளின் வாழ்க்கையும் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. அதை மையப்படுத்திய கதை.

இன்றைய சூழலில் விவசாயம் தான் பிரதானம். நம் நாட்டில் தற்போது விவசாயம் செய்வதற்கு தேவையான நிலபரப்பு குறைந்து வருகிறது. அதை வைத்து நாட்டிற்கு தேவையான கருத்துக்களை எளிய பட்ஜெட்டில் படமாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்திற்காக பணிபுரிந்த அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். பிடித்த வேலையை எப்போதும் கஷ்டப்பட்டு தான் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டிநண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ... விருது படம் பற்றிய வதந்தி: இந்துஜா விளக்கம் விருது படம் பற்றிய வதந்தி: இந்துஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 டிச, 2019 - 18:22 Report Abuse
Mirthika Sathiamoorthi பேய் சீசன் போய் இப்போ விவசாய சீசன்...ஏன் கொடுமைப்பண்ட்ரீங்க? சமீபத்திய புள்ளிவிவரம்..தமிழ்நாட்டில் விவசயிகளின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு விவசாய கூலிகளின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. விவாசியிகள் ஏன் விவசாயத்தை விட்டு வெளியேபோறான் அதற்கான அரசியல் மற்றும் அதற்குண்டான தீர்வு இதை பேசாம வேறெதையோ அதுவும் கற்பனையா விசாயிகள் படத்தை விவசாயியே பாக்க புடிக்காத மாதிரி கருத்து பேசுறீங்க….
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in