Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா

10 டிச, 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Arya-to-do-a-villain-for-Vishal

அரிமா நம்பி, இரு முகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இது இரு ஹீரோக்கள், மற்றும் இரு ஹீரோயின்கள் சப்ஜெக்ட். இரு ஹீரோக்களில் ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், இவர்களின் மோதல் தான் படத்தின் கதை. இதில் விஷால் நல்லவர் கேரக்டரில் நடிக்கிறார். கெட்டவன் கேரக்டரில் நடிக்க பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். பல தயங்கினர்.

இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் விஷால் ஜோடியாக ரித்து வர்மா நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆர்யா ஜோடியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது.

விஷாலும், ஆர்யாவும் ‛அவன் இவன்' படத்தில் அண்ணன் - தம்பிகளாக நடித்தார்கள். ‛இரும்புத்திரை' படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவை கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அதன்பிறகு தான் அர்ஜுன் நடித்தார். இப்போது இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. முறையான அறிவிப்பு பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார்கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: ... ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in