Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார்

10 டிச, 2019 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-workship-at-Kanyakumari-Amman-temple-also-starts-fasting

ரேடியோ ஜாக்கியா இருந்து, எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாகி, இப்போது இயக்குனராகி இருக்கிறார் பாலாஜி. இவர் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்னும் பக்தி படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா. இதற்காக நயன்தாரா படப்பிடிப்பு நடக்கும் நாள் முழுவதும் விரதம் இருக்க முடிவு செய்திருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வெளிநாடுகளில் பார்ட்டி, மாமிசம் என கொண்டாட்டத்தில் இருந்த வீடியோ வெளியானதை பார்த்த ரசிகர்கள், இது தான் உங்கள் விரதமா என கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே கன்னியாகுமரியில் தொடங்கியது. இன்று(டிச.,10) முதல் அதன் படப்பிடிப்பில் இணைகிறார் நயன்தாரா. இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்த அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு விரதம் தொடங்கினார்.

நயன்தாராவின் திடீர் வருகையால் கோவிலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்தனர். இதனால் நயன்தாரா கோவிலை விட்டு வெளியில் வரமுடியாமல் தவித்தார். விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி நயன்தாராவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்குரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ... விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11 டிச, 2019 - 13:35 Report Abuse
A.George Alphonse கடவுளை காண துடிக்காத இந்த பக்தி கூட்டம் நடிகையை காண துடிப்பதும் போலீசால் லாத்தி சார்ஜ் படுவதும் மகா கேவலமாகவும், அருவருப்பாகவும் உள்ளது.திருந்தாத ஜென்மங்கள்.
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
11 டிச, 2019 - 04:48 Report Abuse
Siva Kumar இந்து கோயில்களுக்கு செல்லும் நயன்தாராவை கிறித்துவ மதத்திலிருந்து நீக்கவேண்டும்.
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
10 டிச, 2019 - 16:15 Report Abuse
suresh kumar இன்னும் பதினைந்தே நாளில் கிறிஸ்த்மஸ் வருகிறது. அந்த நாளில், எந்த ஊரில் என்ன பார்ட்டியில் என்ன சாப்பிடுவார்?
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
10 டிச, 2019 - 12:13 Report Abuse
KavikumarRam பாவம் கன்னியாகுமரி அம்மன்.
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
10 டிச, 2019 - 12:08 Report Abuse
R Sanjay பல காதலர்களை மற்றும் கணவரை கண்ட இந்த நடிகை தும்பினாலும் நியூஸ் போடுவீர்கள் என்ன சமுதாயமோ? தெரிந்தே பல ஆண்களுடன் வாழ்ந்த இந்த நடிகைக்கு இவ்வளவு மரியாதை தவறு செய்தவர்கள் தான் இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழமுடியுமா?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in