Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு

10 டிச, 2019 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Copyright-issue:-mahanadhi-shobana-go-to-court-demand-Rs.20-lakhs

சென்னை : பதிப்புரிமையை மீறியதற்காக, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, ரிகார்டிங் நிறுவனத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாடகி, மகாநதி ஷோபனா மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை, 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கமலின், ‛மகாநதி' படத்தில், அவரது மகளாக நடித்தவர் ஷோபனா. அதில், ஷோபனா பாடிய, ஸ்ரீரங்க ரங்கநாதன்... என்ற பாடல் பிரபலம். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருது களை பெற்றுள்ளார். உயர் நீதிமன்றத்தில், ஷோபனா தாக்கல் செய்த மனு: கடந்த, 1996ல், கந்த சஷ்டி கவசம் ஆல்பம் பாடும்படி, சென்னையில் உள்ள, சிம்போனி ரிகார்டிங் நிறுவனத்தினர் அணுகினர். வடபழநியில் உள்ள ஸ்டுடியோவில், ரிகார்டிங் தயாரானது. ஆறு பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பம், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது.

இந்த பாடல்களை, 14 வயதில் பாடினேன். குழந்தைகளுக்கான, டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் ஆல்பம் தயாரிக்க, சிம்போனி நிறுவனத்தினர் அணுகினர். அதில், 33 பாடல்கள் அடங்கி உள்ளன. விசாரணைதற்போது, சிம்போனி நிறுவனம், எனக்குரிய பதிப்புரிமையை மீறி உள்ளது. நான் பாடிய பாடல்கள் தொகுப்பை, சட்டவிரோதமாக விற்றுஉள்ளனர்.

எனக்கும், சிம்போனி நிறுவனத்துக்கும், 1996ல், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லாது; அப்போது, எனக்கு, 18 வயது நிரம்பவில்லை. அந்த ஒப்பந்தம் செல்லும் என, யூகித்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது, 2001 வரை தான் செல்லும். அதன்பின்னும், என் ஒப்புதல் இன்றி, பாடல் பதிவுகளை விற்கின்றனர்.சமூக வலைதளங்களில் இருந்து, என் புகைப்படங்களை எடுத்தும் பயன்படுத்துகின்றனர். எனவே, பதிப்புரிமையை மீறியதற்காக, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சிம்போனி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். எனக்குரிய பதிப்புரிமையை மீறி, ஒலிப்பதிவுகளை தயாரித்து, விற்பனை செய்ய, சிம்போனிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.ஹரிஹர அருண்சோமசங்கர் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, 20ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
'நான்அப்படிப்பட்டவள் அல்ல!'நான்அப்படிப்பட்டவள் அல்ல! கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
16 டிச, 2019 - 18:51 Report Abuse
Dr.C.S.Rangarajan நெற்றியதிலே சுருக்கங்கள் மூப்பின் அடையாளமென்றால், கருணையும், தாராள குணநலனும் கூட சுருக்கங்களால் தாக்கப்படக்கூடும் என்றால் 'துதிப்போர்க்கு' மட்டும் தான் 'வல்வினை' போகக்கூடுமோ
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 டிச, 2019 - 12:51 Report Abuse
skv srinivasankrishnaveni HMV க்குத்தான் உரிமை என்றால் உரிமையை தந்தவர் பாலதேவராயணா ?அவர்தான் சென்னிமலை ஆண்டவரின் அருளால் இந்தக்கவசம் தன்னை பாடியவர் . சாரி இயற்றியவர் பாப்புலர் ஆனது சூலமங்கலம் சகோதரிகளால் தான் இந்ரம் பல கோயில் சூலமங்கலம் சிஸ்டேர்ஸ் குரல்லே ஒலிக்கும் இந்த ஸ்லோகங்களை கேட்டுண்டுருக்கோம் .இப்போது இந்தப்பொண்ணு சோபனா ரவி நித்யஸ்ரீ மஹாதேவன் எல்லாம் பாடிய இசைத்தட்டுகள் வந்துருக்கு எங்கள் குல தெய்வமே அம்மா ஆத்துலே சென்னிமலை ஆண்டவரேதான் . எங்கள் குலதெய்வம் ஆ வச்சுண்டுருக்கும் பலருக்கும் இதுதான் வேதம் போன்றது , மனசஞ்சலம் நீக்கும்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11 டிச, 2019 - 08:07 Report Abuse
Nallavan Nallavan முதல்ல கந்தர் ஷஷ்டி கவசத்தையே நீங்களும் வர்த்தக ரீதியாகப் பாடி இருக்கக் கூடாது... அந்த சிம்பொனி நிறுவனமும் அதை வர்த்தக ரீதியாகப் பதிவு செய்திருக்கக் கூடாது... ஏனென்றால் அந்த கந்தர் சஷ்டி கவசத்தை இயற்றியவர் ஹெச்.எம்.வி. நிறுவனத்துக்குத்தான் பதிவு செய்யும் உரிமையை அளித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் ......
Rate this:
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
11 டிச, 2019 - 07:19 Report Abuse
Watcha Mohideen ஏமாத்தறவன்தான் இந்தியாவில் திறமைசாலி ,எப்படியாகிலும், பணம் சம்பாதிக்கணும் அதான் முக்கியம் .
Rate this:
10 டிச, 2019 - 23:11 Report Abuse
Shankar Ramachandran Enakku migavum piditha kural.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in