'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
வனமகன் படத்தில் தமிழுக்கு வந்தவர் சாயிஷா. அதன்பிறகு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணமும் செய்து கொண்டார்கள். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து வரும் சாயிஷா, சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆர்யா உடன் ‛டெடி' என்ற படத்தில் நடித்துள்ளார்.
சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் இயக்குனர் மகிழ்திருமேனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் நிறைவு நாளை விழாவாக டெடி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.