Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர்கள் என் உழைப்பை தின்கிறார்கள்: எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தி கோபம்

09 டிச, 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Vela-ramamoorthys-angry-post-about-director

பிரபல எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. ‛மதயானைகூட்டம்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். தற்போது வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனது நாவல்களின் தலைப்புகளை என் அனுமதியின்றி திரைப்படங்களுக்கு வைத்து என் உழைப்பை தின்கிறார்கள், என்று இயக்குனர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பட்டத்துயானை, அரியநாச்சி, குற்றபரம்பரை, குருதி ஆட்டம் எல்லாமே நான் எழுதிய நாவல்கள். பிரசித்தி பெற்ற வார, இருவார இதழ்களில் தொடராக வெளிவந்து பிரபல்யமானவை. புத்தக வடிவில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தவை.

என் தலைப்புகளில், என் அனுமதி இல்லாமலே, பட்டத்துயானை திரைப்படம் ஆகியது. குருதி ஆட்டம் திரைப்படம் ஆகி கொண்டிருக்கிறது. அரியநாச்சி வேறு ஒன்றாகி உள்ளது. என் கவனத்திற்கு கொண்டு வராமலே என் தலைப்புகளை எடுத்துக் கொண்ட அன்புமிக்க திரைப்பட இயக்குநர்களே...

ஒவ்வொரு நாவலும் என் எத்தனை ஆண்டுகால உழைப்பைத் தின்றிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இண்டு இடுக்குகளில் நுழைந்து தப்பித்துக் கொள்ள உங்களுக்கு எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனாலும் கொஞ்சம் உள்ளுக்குள்ளே உறுத்தணும். உறுத்துனா... உருப்படுவீங்க.

இவ்வாறு எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டிலும் தொடர விரும்புகிறேன்!இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Ram Ks - Hong Kong,சீனா
13 டிச, 2019 - 20:23 Report Abuse
Ram Ks பட்டத்து யானை என்பது பெரிய கண்டுபிடிப்பா ?? இதற்கெல்லாம் உழைப்பை திருடுகிறார்கள் என்று சொல்வதா ?? அவ்வளவு கற்பனை வறட்சியா இவருக்கு ???
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
10 டிச, 2019 - 13:19 Report Abuse
R Ravikumar எப்போதோ .. பொன்னியின் செல்வன் என்று ஒரு படத்துக்கு பேர் வைத்து விட்டார்கள் . எந்த பொறுப்பும் இல்லாமல் . எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள் ? பாவம் .
Rate this:
Krish - Chennai ,இந்தியா
10 டிச, 2019 - 06:07 Report Abuse
Krish ஒரு பெயர் பேமஸ் ஆனதுக்கு அப்புறம் கேட்காமல் வைப்பது தப்பு.
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
10 டிச, 2019 - 05:40 Report Abuse
Rangiem N Annamalai அய்யா இப்போது முதலில் உங்கள் நாவல் பெயர்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து விடுங்கள் .அதன் பிறகு அனைத்தும் சரியாகிவிடும் .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10 டிச, 2019 - 05:38 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிறந்த படைப்பாளி, திறம் மிக்க திரைக் கலைஞரும் கூட.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in