Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ்

08 டிச, 2019 - 13:24 IST
எழுத்தின் அளவு:
lawrence-spoke-emotionally-on-darbar-audio-launch

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்றனர்.


விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், தலைவர் சொன்ன அதிசயம், அற்புதத்தை வெச்சுத்தானே எல்லாரும் பேசிட்டிருக்காங்க. நான் சொல்றேன் அந்த அதிசயம், அற்புதமே அவர்தான். அவர் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். பகவத்கீதை, பைபிள், குரானில் எல்லாம் என்ன சொல்லிருக்கு? யாரும் மனதால் கூட வேறு யாருக்கும் தப்பு பண்ணிடக்கூடாது என்று. யாருக்கும் துரோகம் பண்ணாதீங்க - உங்க சொல்லாலும், செயலாலும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பார்கள். உன் கடமையை ஒழுங்கா செய் என்பார்கள்.


இதையெல்லாம் புத்தகத்தில் படித்து விட்டோம். ஆனால் அதை நம்ப வேண்டுமே. அதற்கு ஒரு ஆள் படைக்க வேண்டுமே. அதான் தலைவரைக் கடவுள் படைத்தார். நமக்கெல்லாம் ஒரு குரு அவர். கடவுள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குருவைப் படைப்பார்.


இதுவரை அவர் யாரையாவது திட்டிப் பார்த்திருக்கிறீர்களா? அவர் யாருக்காவது துரோகம் செய்து பார்த்திருக்கிறீர்களா? அவரால் அழிந்த குடும்பம் என்று யாரையும் பார்த்திருக்கிறீர்களா? நூறாவது படம் ராகவேந்திரா சாமி என்று படம் எடுத்த ஒரு சூப்பர் ஸ்டாரைக் காட்டுங்களேன் பார்ப்போம். மற்றவர்கள் எல்லாம் தனது நூறாவது படம் மாஸா, ஸ்டைலா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.


அவரிடம் நான் போனில் பேசும் போது, “அண்ணே.. இப்படி பேசுறாங்கண்ணே.. தாங்க முடியலைண்ணே” என்பேன். உடனே அவர் மேலே காட்டி, “கண்ணா.. அவன் பாத்துப்பான்” என்பார். வேறு யாராக இருந்தால் இவ்வளவு தன்னடக்கம், அமைதி, பொறுமை இருக்கவே இருக்காது.பாபா படம் எடுத்த பிறகு தன்னால் யாரும் நஷ்டம் வரக்கூடாது என்று பணத்தை திருப்பித் தந்தவர் தலைவர்.


நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று அவர் மேடையில் கூறுகிறார். நான் வரேன் என்று சொன்னாலே அரை மணி நேரத்துக்கு விசில் அடிப்பார்கள். அந்த மேடையில் வேறு யார் பெயரையும் அவர் சொல்லத் தேவையில்லை. ஆனால் ஸ்டாலின் சார்.. அப்புறம் வேற ஒருத்தர்.. அவர் பெயரையே எனக்கு சொல்லப்பிடிக்கவில்லை..இப்ப நடக்குற ஆட்சி.. இதுக்கு முன்பு நடந்த ஆட்சியையெல்லாம் புகழ்ந்து பேசினார். அவர் ரெண்டு வார்த்தை பேசினாலே அதுதான் அன்றைக்கு செய்தி. எல்லாரும் அரசியல் பேசுகிறார்கள். தலைவர் எதாவது சொன்னால் அதற்கு எதிராக எதுவும் பேசுகிறார்கள். அவருக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள். வந்ததும் தெரியும்.. பார்த்துக்கலாம். வயசாகிடுச்சுங்கிறாங்க.. அவர் நடக்கும் போதே பார்த்துக்கலாம். முன்னாடியே வந்திருக்கலாம்ங்கிறாங்க. வந்த பதவியை வேண்டாமுன்னு சொன்னவரைப் பார்த்திருக்கீங்களா?


இந்த வயசிலே அவருக்கு பணம் வேணுமா, புகழ் வேணுமா? எல்லாரும் அவர் படம் பப்ளிசிட்டிக்காக என்கிறார்கள். டேய்.. பப்ளிசிட்டிக்கு பேரே சூப்பர் ஸ்டாருடா. அவருக்கு பணம், புகழ் எதுவும் தேவையேயில்லை. இப்பவும் கூட அவர் நினைத்திருந்தால் இந்த விழாவில் அவர் குடும்பத்தினரை முதல் வரிசையில் அமர வைக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் இரண்டாவது வரிசையில்தான் அமர வைத்திருக்கிறார்.


சிங்கப்பூர் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர் விடுத்த ஆடியோ செய்தி எல்லாருக்கும் நினைவிருக்கும். ஸ்டாலின், எடப்பாடி ஆகியோரெல்லாம் மேடையைத் தப்பாக உபயோகிப்பதில்லை. அவரவர்கள் நன்றாக மேலே வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் மேடையை நாகரிகமே இல்லாமல் சிலர் உபயோகிக்கிறார்கள்.


இந்த மேடையில் இப்படி பேசியதால் இதன் பிறகு என் தலைவர் என் கூட பேசாமல் இருந்தால் கூட கவலையில்லை. அரசியலை நாகரிகமாகப் பேசுங்கள். எல்லோரும் அப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் ஒரு தலைவர் மட்டும்தான்.. ரொம்ப நாகரிகம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது நம் நாட்டுக்கே கேடு. அரசியலுக்கே தப்பான விஷயம். நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் நான் வரதுக்குள்ளே நீங்க எல்லாம் செத்துப் போகணும் என்று சொல்லும் தலைவனை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? அது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? என் தலைவரைப் பற்றி பேசி அந்த பப்ளிசிட்டியில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். என் தலைவன் ஸ்டேஜை மற்றவர்களைத் தாக்கிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. ஆனால் அந்த தலைவர் எல்லோரையும் தப்பாகப் பேசுகிறார். இனிமேல் அது நடக்கக்கூடாது. அப்படி என் தலைவனைப் பற்றி தவறாகப் பேசினால் நானும் பேசுவேன் என்றார்.Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி-மோகன்லாலுக்கு மனைவியாகும் திரிஷாசிரஞ்சீவி-மோகன்லாலுக்கு ... ரஜினி எடுத்த சபதம் ரஜினி எடுத்த சபதம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10 டிச, 2019 - 05:56 Report Abuse
skv srinivasankrishnaveni அடபோடா புண்ணாக்குப்பயலே மாடுகூட தின்னாது உன் போஸ்டரை ப்ளீஸ் டோன்ட் ஓபன் யுவர் டர்ட்டி மௌத் நாளைக்கே சொல்லுவே ராஜிநீ போஸ்டெரிலே சாணி தட்டினேன் என்று பீத்தபெருமையா அல்பங்களுக்கு பவிசுவான்தாப்பலா ஆடுறானுக
Rate this:
Barathan - chennai,இந்தியா
09 டிச, 2019 - 22:34 Report Abuse
Barathan Hey man நீ நல்ல கூவுற man :-D :-D
Rate this:
Kamal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 டிச, 2019 - 14:37 Report Abuse
Kamal ரஜினி நல்லவராக இப்போ இருக்கிறார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அனால் அறிவான சிந்தனை இல்லாதவர். அவர் ரசிகரகள் அறிவு இல்லதேவர்ஹல். மோசமான ரசிகரகள். லாரன்ஸ் மாறி முட்டாளிகள். இவ்ரகளுக்கு நாட்டை கொடுத்தால் நாடு கேவலமா ஆகிடும். கமல் பரவ இல்லை. கமழும் சீமானும் சேர்ந்தாள் ரஜினி அவர்ஹளுக்கு கீழ இருப்பது நல்லது. நாட்டுக்கும் நல்லது.
Rate this:
Tamil - chennai,இந்தியா
09 டிச, 2019 - 09:14 Report Abuse
Tamil நீ ஸ்ரீரெட்டிக்கு செய்த சமூக சேவை வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்து மண்டி போட்ட கூத்தாடி, நீ எல்லாம் பேசுற.. உன்னை எல்லாம் யாரும் ஒரு ஆளாக கூட எவனும் மதிப்பதில்லை
Rate this:
08 டிச, 2019 - 20:45 Report Abuse
இனியவன் இந்த லாரன்ஸ் ஒரு டுபாக்கூர். எங்கு போனாலும் ஒரு கோடி தருகிறேன் என்று சொல்லி விளம்பரம் தேடிக் கொள்வான். ஆனால் கடைசி வரை யாருக்கும் கொடுத்ததில்லை. பஞ்சம் பிழைக்க வந்தவன் இன்று நாலு காசு சேர்த்திய உடன் நமக்கு அறிவுரை கூறுகிறான். இன்னும் என்ன கருமத்தையெல்லாம் நாம் அனுபவிக்கப் போகிறோமோ?.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in