Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன் போஸ்டர் மீது 'சாணி' அடித்தேன் - ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு

08 டிச, 2019 - 07:45 IST
எழுத்தின் அளவு:
Ragava-lawarance-speech-about-kamal-create-controversy


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. நேற்று இரவு அவர் பேசிய உடனேயே சமூக வலைத்தளங்களில் பலரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு அதற்கு நள்ளிரவிலேயே விளக்கமும் கொடுத்துள்ளார் ராகவா.


அவர் பேசுகையில், “தலைவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும் போது சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதுல போய் சாணி அடிப்பேன். அப்போ வந்து மனநிலைமை அப்படி இருந்தது. இப்ப பார்க்கும் போதுதான் தெரியுது, அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு குளோஸுன்னு. ரெண்டு பேரும் கை பிடிச்சி நடக்கும் போதெல்லாம் வேற ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுது. அவ்வளவு தீவிரமான ரசிகனா இருந்த என்னை இப்ப முதல் வரிசைல உட்கார வச்சி அழகு பார்க்கற ஒரே மனுஷன் சூப்பர் ஸ்டார்தான்,” என்றார். அவருடைய இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்களும் பலமாக கைதட்டினர். தொடர்ந்து பேசுகையில் நாம் தமிழர் கட்சி சீமானையும் கிண்டலடித்தார். இதனால் நள்ளிரவில் கமல்ஹாசன் ரசிகர்களும், சீமான் கட்சி தொண்டர்களும் ராகவா லாரன்ஸுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.


பின்னர் ராகவா லாரன்ஸ் அதற்கு ஒரு விளக்கமளித்தார். அதில், “தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய பிறகு, கமல் சார் போஸ்டர் மீது நான் சாணி அடித்தது பற்றி பேசிய பேச்சு மட்டும் ஹைலைட் செய்யப்படுகிறது. நான் சிறு வயதில் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்த போது கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த விஷயம் அது. கமல் சார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் எப்போதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பேன். ஆனால், இங்கு நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. முழு வீடியோவைப் பார்த்தால் உங்களக்குப் புரியும். சிலர் இதை டிவிஸ்ட் செய்கிறார்கள். என் மனதில் கமல் சாருக்கு எவ்வளவு மரியாதை என்பது எனக்குத் தெரியும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்,” எனப் பதிவிட்டு அவர் பேசிய பேச்சின் வீடியோ லின்க் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
நம்பிக்கை வீண் போகாது : ரஜினிநம்பிக்கை வீண் போகாது : ரஜினி லைக்குகளை குவிக்கும் இன்ஸ்டா வாழ்த்து லைக்குகளை குவிக்கும் இன்ஸ்டா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10 டிச, 2019 - 03:51 Report Abuse
J.V. Iyer இவர் சொன்னது என்ன தவறு? தெரியாத வயதில் செஞ்சதை சொன்னார். நல்ல மனுஷர்.
Rate this:
Rajesh - Delhi,இந்தியா
09 டிச, 2019 - 02:38 Report Abuse
Rajesh nerla paathaa yaarume சாணி யையும் மனுஷ கழிவையும் கலந்து உன் மூன்ஞ்சியில அடிப்பாங்க
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08 டிச, 2019 - 19:07 Report Abuse
தாண்டவக்கோன் இவெம்மூஞ்சியே அந்த நெறெத்துலதான் இருக்கு 😂😂😂
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
08 டிச, 2019 - 18:04 Report Abuse
Narasimhan இவன் மூஞ்சி ஏற்கனவே சாணியில் தோய்த்தெடுத்தது போல் தான் இருக்கிறது. கமலின் கால் தூசுக்கு பொறாத இந்த வெட்டி பயல்
Rate this:
vaithiyalingam - Bengaluru,இந்தியா
08 டிச, 2019 - 17:03 Report Abuse
vaithiyalingam ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு எது இவ்வளவு பணம் ? தொண்டு செய்கிறேன், மாற்று திறனாளிகளுக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்வதில் ஏதோ பெரிய வில்லங்கம் இருக்கிறது. அதுவும் அழகான மாற்றுத்திறனாளிகளுக்கு தான் இந்த சுத்த தமிழன் லாரன்ஸ் உதவுவார்
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09 டிச, 2019 - 10:53Report Abuse
ராஜவேலு ஏழுமலைவிசாரிக்கப் படவேண்டும்....
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in