ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.
வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கும் இந்த மியூசிகல் ரொமாண்டிக் திரைப்படத்தில், விஜய் சேதுபதி-மேகா ஆகாஷ் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில், இவர்களோடு இயக்குநர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ் திருமேனி, நடிகர் விவேக் உள்ளிட்டோரும் நடிக்க, தற்போது, நடிகை கனிகாவும் இணைந்திருக்கிறார்.
இது குறித்து, நடிகை கனிகா கூறியிருப்பதாவது: தமிழ் படங்களில் நடிக்க எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனாலேயே, தமிழகத்திலேயே தங்கி படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த சூழலில்தான், மலையாள பட வாய்ப்புகள் வந்தன. அங்கே சென்று நடிக்கத் துவங்கினேன். அங்கும், நான் பிசியான நடிகையாகத்தான் இருந்தேன். அதற்போது, நடிக விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் படத்துக்குப் பின், மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.