Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காட்டுமிராண்டிகளுக்கு பயம் தரும் என்கவுன்டர் : நயன்தாரா

07 டிச, 2019 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-welcomes-Hyderabad-encounter

தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு என்கவுன்டர் மூலம் சரியான தண்டனை கிடைத்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை

‛‛சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால். தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் சட்டத்துக்கு புறம்பாக பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயன் தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும் , அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மிதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும்''

இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
'தர்பார்' படத்தில் பாடிய திருநங்கைகள் இசைக்குழு'தர்பார்' படத்தில் பாடிய ... மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

prem -  ( Posted via: Dinamalar Android App )
08 டிச, 2019 - 17:12 Report Abuse
prem லிவிங் டு கெதர் இருக்கிறவா எல்லாம் பேசுற மாதிரி ஆச்சு பத்தியா தமிழ்நாட்டு மக்களுடைய நிலைமை....
Rate this:
sam -  ( Posted via: Dinamalar Android App )
08 டிச, 2019 - 10:56 Report Abuse
sam யார் யார் என்னத்தச் சொல்வேண் ஒரு அருகதை எல்லாம் போச்சு
Rate this:
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
08 டிச, 2019 - 06:08 Report Abuse
C.Jeyabalan என்றாலும், போலீஸ் அதிகாரிகள் சற்று உஷாராக இருந்திருக்க வேண்டும், அந்த கயவர்களை சடடத்தின் முன் நிறுத்தி தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும்.
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
08 டிச, 2019 - 02:46 Report Abuse
Murthy அப்படியா? கோவையில் இப்படித்தான் ஒருவரை என்கவுண்டர் செய்தார்கள், அதன்பிறகு சேலத்தில் ஒரு குழந்தையை கழுத்து அறுத்து ஒருவன் கொன்றான், பிறகு போனவருடம் ஒருவன் கோவையில் ஒரு குழந்தையை கொன்றான்...ஏன் பயம் வரவில்லை?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08 டிச, 2019 - 01:11 Report Abuse
Ramesh R காட்டு மிராண்டிகள் ஓகே, அரசியல்வாதிகள் அவர்களின் மகன்கள்??? என்ன பதில் உள்ளது நயன்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in