Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தர்பார்' இசை வெளியீடு, பரபரப்பைக் கிளப்புவாரா ரஜினி?

07 டிச, 2019 - 16:29 IST
எழுத்தின் அளவு:
What-Rajini-will-speak-in-Darbar-Audio-Launch?

தமிழ்த் திரையுலகில் நடக்கும் விழா மேடைகளில் பரபரப்பாக பேசி புதிய சர்ச்சையை ஏற்படுத்துவதை 1996ம் ஆண்டிலிருந்தே செய்து வருகிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் நடந்த கமல்ஹாசன் விழாவில் கூட 'அதிசயம்' பற்றிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

2021ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியலில் இறங்குவது பற்றி தீவிரமாகப் பேசி வருகிறார் ரஜினிகாந்த். அவருடைய பிறந்த நாளுக்கு இன்னும் ஐந்து நாட்கள்தான் உள்ளன.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் இசை வெளியீடு இன்று(டிச.,7) மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 'தர்பார்' என்றால் அரசவை என்று பொருள். ரஜினிகாந்த் அடுத்து அரசியலில் இறங்குவதை மறைமுகமாகக் காட்டும் வகையில்தான் படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று அறிவிப்பு வந்த போதே சர்ச்சை வந்தது.

'ரஜினிகாந்தின் தர்பார்' என்றுதான் அவருடைய ரசிகர்களும் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்கள். இப்படி பொருத்தமாக அமைந்துள்ள 'தர்பார்' பட இசை வெளியீட்டு விழாவில் இன்று ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து அவரது ரசிகர்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் காத்திருக்கின்றன.

ரஜினி என்ன பேசினாலும், அவருடைய படத்தை ஓட வைப்பதற்காக அவர் பரபரப்பு கிளப்புகிறார் என ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல், ஒரு வருடத்திற்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் என தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடாக மாறப் போகிறது. அந்த சூட்டை மேலும் அதிகமாக்கும் வகையில் ரஜினிகாந்த் இன்று பேசுவாரா, அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றி அறிவிப்பாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரப் போகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை: மவுனம் கலைத்தார் மகாலட்சுமிவீதிக்கு வந்த குடும்ப பிரச்னை: ... 'குயின்' டிரைலர், தமிழை விட ஹிந்தி, ஆங்கிலத்திற்கு அதிக வரவேற்பு 'குயின்' டிரைலர், தமிழை விட ஹிந்தி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in