பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சின்னத்திரையில் பிரபலமானவர்கள் நடிகர் ஈஸ்வரும், அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீயும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் கணவர் தன்னை தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயஸ்ரீ. அப்போது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
தன் கணவர், நடிகை மகாலட்சுமியுடன் தகாத உறவு வைத்திருப்பதாக ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார். ஈஸ்வரும் அதற்கு பதிலடி தரும் வகையில் மகாலட்சுமியின் கணவருடன் வேண்டுமானால் ஜெயஸ்ரீக்கு தொடர்பிருக்கலாம் என்றார். இருவருமே தங்களது புகாருக்கு ஆதாரம் வைத்திருப்பதாகக் கூறினார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த மகாலட்சுமி தற்போது முதன்முறையாக தன் பக்க விளக்கத்தை அளித்திருக்கிறார். அதில், 'ஜெயஸ்ரீ என் மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.
நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. ஆனால், என் கணவருக்கு ஜெயஸ்ரீ நீண்டநாள் தோழி என்பது இப்போது தான் எனக்குத் தெரிய வந்துள்ளது. எனது சொந்த வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் அவர் கூறுகிறார். எனக்கு தெரியாமல் எனது கணவரின் தோழியாக அவர் இருந்துள்ளார்'.
இப்போது நடக்கிற பிரச்னைகளுக்கு எல்லாம் ஜெயஸ்ரீயும், என் கணவர் அனிலும் தான் காரணம் என நினைக்கிறேன். ஜெஸ்ரீ மாதிரி என் கணவரை கொச்சைப்படுத்தி பேச விரும்பவில்லை. எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம்.
இவ்வாறு மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.