Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாய்மொழி மறவா சமூகத்தை கட்டமைப்பது அவசியம்!

06 டிச, 2019 - 00:21 IST
எழுத்தின் அளவு:
We-need-to-build-a-community-of-forgetting-the-mother-tongue!

நெடுஞ்சாலை, மாயா படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஆரி, அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:




நெடுஞ்சாலை, மாயா படங்களுக்கு பின் பெரிய வெற்றி கிடைக்காதது குறித்து?


என் எல்லா படங்களும், நெடுஞ்சாலை போல் அமைந்து விடாது. ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதற்காகவே வெவ்வேறு கதைகளை தேர்ந்தெடுக்கிறேன்.


தற்போது மூன்று படத்தில் நடித்து முடித்துள்ளேன். ஐந்து படம் கைவசம் உள்ளது. அனைத்தும் வெவ்வேறு கதைக்களம். ரசிகர்களின் எதிர்பார்ப்பு அடுத்தாண்டு பூர்த்தியாகும்.


அலேக்கா எந்த மாதிரியான படம்?


இன்று காதலுக்கு, காதலே பிரச்னையாக உள்ளது. காதலிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், காதலித்து திருமணம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைவு. இன்றைய இளைஞர்களின் கதையை இப்படம் பேசும்.




பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கிறீர்களாமே?


ஹாலிவுட்டில், 'மெத்தாலஜிக்கல் பீரியட்' படங்கள் நிறைய வரும். தமிழ் சினிமாவில் இந்த மாதிரி படம் ரொம்ப குறைவு. அதுபோன்ற ஒரு கதைக்களம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறேன்; இன்னும் பெயரிடப்படவில்லை. என்றென்றும் புன்னகை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய காளிங்கன் இப்படத்தை இயக்குகிறார்.


வெற்றி படத்திற்கு எது அவசியம் என நினைக்கிறீர்கள்?


கதைக்களமும், இயக்குனரின் பார்வையும் முக்கியம். இப்போது வீட்டுக்குள்ளேயே தியேட்டர்கள் வந்து விட்டன. இதையெல்லாம் விட்டு, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கின்றனர் என்றால், அதற்குண்டான நல்ல கதைகள் அவசியம். உலக சினிமாக்களுக்கு இணையாக படங்கள் தர வேண்டியுள்ளது.


உங்களுடைய சமூக பணிகள் எப்படி போகின்றன?


உயிரோடு இருக்கும் வரை இந்த சமூகத்தில் இருக்கப்போகிறோம். நம்மால் முடிந்த சேவையை செய்து கொண்டே இருக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பது தொடர்பான பணியை, கையில் எடுத்துள்ளேன். தாய்மொழி மறவா சமூகம் அவசியம்; இதை கட்டமைப்பது முக்கியம். உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்; தற்போது தமிழகம் முழுக்க அப்படத்தை வெளியிட திட்டமிட்டு, அரசுடன் பேச்சு நடந்து வருகிறது.




அரசியல் ஆர்வம்?


அரசியல் என்பது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒரு விஷயம். அரசியல் அனைவரின் வாழ்க்கையிலும் உண்டு. சமூகம் சார்ந்த சேவையே என் பணி. நல்ல தலைமையை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்ற இளைஞர்களை உருவாக்க வேண்டும். இந்த மாதிரியான வேலையில் தான் எனக்கு ஆர்வம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛அம்மா'வுக்கு என்ன அர்த்தம்: ஜெ., கதையில் ‛குயின்' டிரைலர்‛அம்மா'வுக்கு என்ன அர்த்தம்: ஜெ., ... நட்சத்திர பட்டாளம்! நட்சத்திர பட்டாளம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in