Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அம்மா'வுக்கு என்ன அர்த்தம்: ஜெ., கதையில் ‛குயின்' டிரைலர்

05 டிச, 2019 - 19:36 IST
எழுத்தின் அளவு:
Queen-Trailer-out

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி, ‛தி அயர்ன் லேடி, தலைவி பெயர்களில் படமாகி வருகின்றன. இவற்றுடன் இயக்குனர் கவுதம் மேனனும் ‛குயின் என்ற பெயரில் வெப்சீரிஸாக எடுத்துள்ளார். ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

வெப் சீரிஸுக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியான போது அதில் அவரின் முகத்தோற்றம் தெரியாமல் இருந்து வந்தது. நேற்று அவரின் போட்டோக்கள் வெளியாகின. அதில் ஜெயலலிதாவை பிரதிபலிப்பது போன்று ரம்யா கிருஷ்ணன் இருந்தார். இந்நிலையில் இதன் டிரைலர் வெளியாகி உள்ளது.

டிரைலர் பற்றிய ஒரு பார்வை...

2.44 நிமிடம் ஓடும் டிரைலரில் ஜெயலலிதாவின் குழந்தை பருவம் தொடங்கி, கதாநாயகி ஆனது, எம்.ஜி.ஆர்., உடன் அரசியலில் நெருக்கமாக பயணித்தது, பின்னர் முதல்வரானது வரை பல விஷயங்கள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர்., இறந்த பின் அவரது உடலை ஊர்வலமாக எடுத்தும் செல்லும் முன்னர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏமாற்றங்கள் போன்றவை மேலோட்டமாக இந்த டிரைலர் இடம் பெற்றன. குழந்தை பெற்றால் தான் ‛அம்மாவா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக ‛குயின் அமைந்துள்ளது. அதேசமயம் ஒரு காட்சியில் முத்தக்காட்சி இடம் பெற்றுள்ளது. அதை தவிர்த்து இருக்கலாம்.

ஜெயலலிதா என பெயர் வைத்தால் பிரச்னை வரும் என்பதால் ஜெயலலிதா என்ற பெயரை சக்தி ஜெயஸ்ரீ என மாற்றி உள்ளனர். அதேப்போன்று எம்.ஜி.ஆர்., கதாபாத்திரத்தை ஜி.எம்.ஆர்., என மாற்றி உள்ளனர்.

ஜெயலலிதாவின் பள்ளி பருவத்து கேரக்டரில் அனிகாவும், கதாநாயகி கேரக்டரில் அஞ்சனா ஜெயப்பிரகாஷூம், அரசியல் காலத்து கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனும், எம்.ஜி.ஆர்., வேடத்தில் மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திக்கு வில்லன் வினய்சிவகார்த்திக்கு வில்லன் வினய் தாய்மொழி மறவா சமூகத்தை கட்டமைப்பது அவசியம்! தாய்மொழி மறவா சமூகத்தை கட்டமைப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
06 டிச, 2019 - 06:01 Report Abuse
skv srinivasankrishnaveni ஓகே அவ்ளோதான் ஜெயாம்மாவிடம் இருந்த கம்பீரம் ஆளுமை மைனஸ் பாயிண்டு மேலும் தேவையே இல்லாத மூவி இது சசிகளவா நடராசனா வரப்போறதும் யாரு அரசியல்வாழ்விலே மாபெரும் வில்லன் நடரானும் சசிகலா என்ற திடீர்க்கோடீஸ்வரியும்தானே ஜெயாவும் சசியும் செய்த முக்கிய மார்டெரே பாலுஜிவெல்லர்ஸ் பாலுவை கொன்னதுதான் உலகறிஞ்ச உண்மை அடுத்தமகா பாதகம் பெரியவர் ஜெயேந்திரருக்கு ஏற்படுத்தியகளங்கம் கலியுகம் அதன்பலனை யம் ஜெயாம்மா அனுபவிச்சாங்க சிறைக்குபோனாங்க மெய்யாலும் அவருக்கு இவ்ளோபணவெறியே இல்லேன்னு சொல்லுவாங்க ஏவாளோ பெற்றபிள்ளைக்கு கின்னஸ் ரெகார்டுலவராப்பால் திருமணம் செய்தது ரெண்டும் கோட்ஸ்டாண்டுபோல எல்லா நகைகளையும் மாத்திண்டு நின்னது எல்லாமே அசிங்கமானவைகளேதான் கடைசீவரை அவருக்கு கிட்னி போனதை மறைச்சு தானே தன் இஷ்டததுக்கு அவரை குழிதோண்டிப்போதைச்சாலே சசி மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது நடிகையாக நெறைய சம்பத்திச்சங்க அவளுடை வருவாயிலே சந்தியாதான் போயஸ் வீடு திராக்ஷைத்தோட்டம் எல்லாம் வாங்கியவாளுக்கு சேர்த்தங்க்க என்பதும் உண்மை அதைப்பிடுங்கிக்கப்பார்த்த பல வித் க்கள் இருந்தாங்க என்பதும் உண்மை இந்த பன்னாடை சசிகிட்டேபொயி ஏமாந்தாங்களே அதுதான் மமாபாதகக்கொடூரம் தெய்வம் நிஸ்ச்சயம் அந்தகொள்ளையர்கூட்டம்களை ஒலிச்சுக்காட்டும் பாருங்க அந்தம்மா ஸ்ரீ பார்த்தசாரதிக்கு பக்தை பெருமாள் நிஸ்ச்சயம் அந்தம்மாவுக்கு கேடு செய்த இந்தகேதீஸ்வரியை பழிவாங்குவார்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
05 டிச, 2019 - 20:34 Report Abuse
oce ஜெயலலிதா நேர்வகிட்டை சற்று தள்ளி வைத்திருப்பார். ரம்யா நேராக வைத்திருக்கிறார்.
Rate this:
Pavithra - Bengaluru,இந்தியா
06 டிச, 2019 - 00:49Report Abuse
Pavithraஆமா, இப்ப வகிடு தான் ரொம்ப முக்கியம். கோர்ட் குற்றவாளி என்று சொன்னவரை குற்றவாளி என சொல்ல என்ன தயக்கம்? அவரின் அறிவிக்கப்படாத மோடி கூட்டணிதானே. அப்படி பேஷா ஒத்துக்கோங்கோ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Dagalti
  • டகால்டி
  • நடிகர் : சந்தானம்
  • நடிகை : ரித்திகா சென்
  • இயக்குனர் :விஜய் ஆனந்த்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in