Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆசிட் வீசுவேன் என காதலர் மிரட்டுகிறார்: கதறி அழுத அஞ்சலி அமீர்

05 டிச, 2019 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Peranbu-Actress-Anjali-Ameer-faces-acid-attack-threat

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாடல் மற்றும் நடிகை அஞ்சலி அமீர். திருநங்கையான இவர், நிறைய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடித்த பேரன்பு படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அப்படத்தில் அவர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்ததால், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பேரன்பு படத்திற்குப் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது தனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அடுத்தாண்டு மே மாதம் அப்படம் ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ்வாக ரசிகர்களுடன் உரையாடினார் அஞ்சலி அமீர். அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்த சோகங்கள் பற்றி ரசிகர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

'நான் ஒரு நபருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தேன். அவர் என்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தார். மிகவும் கொடுமைப்படுத்தினார். இதனால் மனமுடைந்து ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். எனவே எனது வாழ்க்கை துணையை பிரிந்தேன்.

ஆனால், நான் பிரிந்து சென்றால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். முகத்தில் ஆசிட் அடிப்பேன் என்றும் காதலர் மிரட்டினார். கைசெலவுக்கூட என்னையே நம்பியிருந்த காதலர், என்னிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளார். காதலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்க உள்ளேன்' என அஞ்சலி தெரிவித்தார்.

மேலும் பெற்றோர் உள்பட தனக்கு ஆதரவாக யாருமே இல்லை என வருத்தத்துடன் கூறிய அஞ்சலி, ஒரு கட்டத்தில் சோகத்தை அடக்கி வைக்க முடியாமல் லைவ்விலேயே கதறிக் கதறி அழுதார்.

தனது காதலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அஞ்சலி முன்வைத்தாலும், அவர் யார் என்பதை அந்த வீடியோவில் அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. போலீசில் அவர் புகார் அளிக்கும் போது, அந்நபர் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வலுக்கட்டாயமாக மீனா கெட்டவார்த்தை பேசவில்லை: ஒ.ஜி.மகேந்திரன்வலுக்கட்டாயமாக மீனா கெட்டவார்த்தை ... உயரத்தில் இருக்க வேண்டியவர் சிம்பு: கவுதம் மேனன் உயரத்தில் இருக்க வேண்டியவர் சிம்பு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in