மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
நடிகை மீனா முதன் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் நடிகர் ஒ.ஜி.மகேந்திரனும் நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. மீனா, ஒ.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்த வெப் சீரிஸில் நடிகை மீனா, ஆபாசமான வார்த்தைகளை அதிகம் பேசி நடித்திருப்பதாக கேள்விபட்டோமே அது உண்மையா? என, நடிகை மீனாவிடமே பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகை மீனா பதில் அளிக்கத் தயங்கினார். உடனே அருகில் இருந்த நடிகர் ஒ.ஜி.மகேந்திரன் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது: இந்த வெப் சீரிஸில், நடிகை மீனா உறுதியான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கேரக்டருக்காக கெட்ட வார்த்தை பேசித்தான் ஆக வேண்டும். அதனால்தான் பேசினாரே தவிர, பேசித்தான் ஆக வேண்டும் என்ற வலுக்கட்டாயத்துடன் பேசவில்லை. வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் போது பாருங்கள். ஒவ்வொருவரும், நடிகை மீனா கெட்ட வார்த்தை பேசித்தான் ஆக வேண்டும் என்பதை உணருவீர்கள் என்றார்.