Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயலலிதாவாக மாறினார் ரம்யா கிருஷ்ணன்

04 டிச, 2019 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Ramya-Krishnan-really-looks-like-Jayalalitha

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் பலரும் இறங்கி இருக்கின்றனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கும் தலைவி படம் விறுவிறுப்பாக தயாராகிறது. அதே போல, நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கும் த அயர்ன் லேடி என்ற படமும் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஜெயலலிதாவாகவே மாறி தான் நடித்திருப்பதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சொல்ல, தற்போது, வெப் சீரிஸுக்கான டீசரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான போது அதில் அவரின் முகத்தோற்றம் தெரியாமல் இருந்து வந்தது.

இப்போது அவரின் போட்டோ வெளியாகி உள்ளது. அதில், ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாகவே மாறியிருக்கிறார். அவரின் சாயல் இவருக்கு ஒத்து போய் உள்ளது. இதற்கிடையில், வெப் சீரிஸின் டிரைலர் நாளை(டிச.,5) மாலை வெளியிடப்படும் என்றும் தயாரிப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் : இசை வெளியீட்டு விழா அறிவிப்புதர்பார் : இசை வெளியீட்டு விழா ... நீச்சல் குளம் முடித்து பீச்: கவர்ச்சியில் கிறங்கடிக்கும் அக்ஷரா கவுடா நீச்சல் குளம் முடித்து பீச்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

05 டிச, 2019 - 11:07 Report Abuse
ருத்ரா இன்று தான் ஜெ அவர்கள் மீண்(டு)ம் வரக்கூடாதா என்று நினைத்தேன். அவர் வாழ்க்கை முதல் வழக்கு வரை உண்மை மாறாமல் நடிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
05 டிச, 2019 - 01:14 Report Abuse
LAX முக பாவனையிலும், சிம்மக்குரலிலும் J கேரக்டரை ஏற்று நடிக்க மிகவும் பொருத்தமானவர் ரம்யா கிருஷ்ணன் மட்டுமே.. வாழ்த்துக்கள் ரம்யா ஜி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in