Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி குக்காக வருகிறேன்: சுசித்ரா

04 டிச, 2019 - 17:44 IST
எழுத்தின் அளவு:
Suchitra-backs-with-Cooking

சமீபத்தில் பாடகி சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி சுஜிதா போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து போலீசார் அவரைத் தேட, அவர், ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். வீட்டில் தங்கியிருக்கப் பிடிக்காமல், ஓட்டலில் வந்து தங்கி இருப்பதாக சுசித்ரா போலீசிடம் சொன்னார். இதற்கிடையில், பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதிப்பு என செய்தி பரவியது.

இந்நிலையில், தனது சங்கடங்கள் குறித்தெல்லாம் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2017 பிப்ரவரியில், என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து தனுஷ், ஹன்சிகா, ஆண்ட்ரியா, த்ரிஷா, அனிருத், ராணா, உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி திரையுலகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் என்பதால், நானே கடும் அதிர்ச்சிக்குள்ளாகினேன். எனக்குத் தெரியாமல், என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து எப்படி புகைப்படங்கள் வெளியாகும் என புரியாமல் தவித்தேன். பின் தான் தெரிந்தது, என்னுடைய டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தவர்கள், அதில் இருந்து புகைப்படங்களை எடுத்ததாகச் சொல்லி, மார்பிங் செய்யப்பட்ட படங்களையெல்லாம் வெளியிட்டுள்ளனர். இதனால், எனக்கு ஏகப்பட்ட சங்கடங்கள் உருவாகின. இருந்தாலும், இது தொடரக் கூடாது என்பதற்காகவே, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்தேன்.

என்னுடைய டுவிட்டர் பக்கத்தை 4.5 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இதைத்தான் யாரோ தவறாகப் பயன்படுத்தி, படங்களை வெளியிட்டதன் மூலம், பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினர். இதனால் எனக்கு மிகப் பெரிய மன அழுத்தம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் என்னுடைய விவகாரத்தும் நடந்தது. அதனால், கூடுதல் மன அழுத்தத்தில் நான் இருந்தேன்.

தனுஷ், அனிருத் என எல்லோருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தியதோடு, அது என்னால்தான் ஏற்பட்டது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. இதனால், வெகு காலம் மன அழுத்தத்தில் தள்ளப்பட்டேன். இதில் இருந்து விடுபட படிக்க நினைத்தேன். பின், சமையல் எனக்குப் பிடிக்கும் என்பதால், லண்டலுக்குச் சென்றேன். அங்கு பிரெஞ்சு சமையலைக் கற்றுக் கொண்டேன்.


தற்போது, அந்த சமையல் கலையை எல்லோருக்கும் கற்றுக் கொடுப்பதற்காக யூடியூப் மூலம், அதை கற்றுக் கொடுக்கவிருக்கிறேன். யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டாக்குடன் வெளியிட இருக்கிறேன். சுசி லீக்ஸ் என்ற பெயரில் ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மத்தியில் இந்தப் பெயரை பயன்படுத்தி, சமையல் கலையை பலருக்கும் கற்றுக் கொடுத்து, சுசி லீக்ஸ் வெளியிட்டவர்களின் மூக்கில் குத்தும் தீவிரத்தில் இருக்கிறேன்.



இவ்வாறு சுசித்ரா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ?ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ? நித்யானந்தா தீவுக்கு 'பாம்' வையுங்கள் -  நடிகர் மனோஜ் ஆவேசம் நித்யானந்தா தீவுக்கு 'பாம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05 டிச, 2019 - 12:00 Report Abuse
Nallavan Nallavan டுவிட்டரை ஹாக் செய்வது கடினம் .... அக்கா பொய் சொல்லுது .....
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05 டிச, 2019 - 11:59 Report Abuse
Nallavan Nallavan காய்ஞ்சுபோல பிரட்டு மாதிரி ஆக்கிட்டானுவளே ....
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
05 டிச, 2019 - 11:19 Report Abuse
தாண்டவக்கோன் காயமே அது பொய்யடா, காற்றடைத்த பையடா 👛👝
Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
05 டிச, 2019 - 10:31 Report Abuse
நக்கீரன் மானம் போனது போனதுதான்... இனி திரும்பி வரப்போவதில்லை. இனியாவது திருந்தி வாழ்தல் நல்லது.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
05 டிச, 2019 - 08:01 Report Abuse
Vijay அதிகமா லைக் வியூஸ் வரணும்னு எவனாவது சுசிக்குக் யை ஹாக் செய்து சுசிக்குத்து னு வீடியோ வராமல் இருந்தால் சரி .. வந்தாலும் நல்லாத்தான் இருக்கும் ..
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in