Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் மீனா ?

04 டிச, 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Rajini---Meena-to-pair-again

‛தர்பார்' படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் சில சீனியர் நடிகைகளின் பெயர் அடிபட்டு வருகிறது. ஏற்கனவே நடிகை குஷ்பு இந்தப்பட்டியலில் உள்ளார்.

இந்நிலையில் நடிகை மீனாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் தான் நடித்துள்ள கரோலின் காமாட்சி என்கிற வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, அவரிடம் ரஜினி படத்தில் நடிக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு அவர், இதுப்பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.

இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறாமல் தன்னால் இது பற்றி எதுவும் கூற முடியாது என மீனா கூறியதிலிருந்தே அந்த படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றும், பட தயாரிப்பு நிறுவனம் அதை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மீனா விரும்புகிறார் என தெரிகிறது.

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் ‛அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் நடித்த மீனா, அதன்பிறகு ‛எஜமான் வீரா முத்து' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படும் ‛இருட்டு' நடிகைவிஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ... சுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி குக்காக வருகிறேன்: சுசித்ரா சுசி லீக்ஸால் பாதிக்கப்பட்டு சுசி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vadivel - bhavani,இந்தியா
05 டிச, 2019 - 06:07 Report Abuse
vadivel ஒருவேளை அம்மாவாக நடிக்க இருக்கிறார்களோ என்னவோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in