Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் நடிக்கும் ராஷ்மிகா

04 டிச, 2019 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Rashmika-Mandanna-continue-acting-3-years-without-rest

‛கீதாகோவிந்தம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் தமிழிலும் அவர் பிரபலமானார். தற்போது தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'கடந்த மூன்று ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் நடித்து வருவதாக' கூறினார் அவர்.

மேலும், 'இப்படி ஓய்வே இல்லாமல் நடித்து வருவதால் உடலுக்கும், மனதுக்கும் நானே அழுத்தம் தருகிறேன். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாளாவது ஓய்வெடுக்க முடியுமா என ஏங்கிக்கிடக்கிறது எனது உடல்

தற்போது ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். காலை ஒரு மாநிலம், மதியம் வேறு மாநிலம், இரவு மற்றொரு மாநிலம் என ஓடி ஓடி நடிக்கிறேன். வேலை பார்ப்பது மட்டும் முக்கியமல்ல. உடல் நலன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளவது அவசியம் என்பதை இப்போது உணர்கிறேன். தற்போது நான் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்கிறேன். ஆனால் அது தவறான விஷயம். இனி இந்த தவறை செய்யக் கூடாது என நினைக்கிறேன். எத்தனை படங்களில் நடித்தாலும், அதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அப்போதும் நான் வெளியூர் படப்பிடிப்பில் தான் இருந்தேன். எனது உடல் மோசமான நிலையில் இருந்தபோதும் நான் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். நான் போராடும் குணம் படைத்தவள். எனவே எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வனில் இணைந்த ‛சண்டக்கோழி' வில்லன்பொன்னியின் செல்வனில் இணைந்த ... விஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படும் ‛இருட்டு' நடிகை விஜய் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in