யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். தமிழில் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். இந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் அதிக வசூலைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் நடித்துள்ள 'குட் நியூஸ்' படம் இந்த மாதம் வெளிவர உள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அக்ஷய்குமார் பேசகையில் பெரிய இயக்குனர்கள் அவர்களது படங்களில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
“பெரிய இயக்குனர்கள் உங்களைத் தேர்வு செய்யாத போது, நாம் நமது சொந்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு பெரிய பப்ளிகேஷன்களில் வாய்ப்பில்லாத போது சிறியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கிருந்து நாம் அடுத்த கட்டத்திற்கு தாவ வேண்டும். வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நாம் திறமைசாலியாகத்தானே இருக்கிறோம், ஏன் நம்மை யாரும் தேர்வு செய்யவில்லை என யோசிக்கக் கூடாது.
பெரிய இயக்குனர்கள் எனது படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால், என்னை வைத்து அவர்கள் படங்களை இயக்கியது கிடையாது. தகுதியுடன் இருக்கும் சிலரைத் தேடி அவர்கள் செல்கிறார்கள். இங்கு கான்கள் மட்டும் கிடையாது, கபூர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தகுதி இல்லை என நினைக்கிறேன், அதனால் எனது வழியை நான் தேர்ந்தெடுத்தேன்.
'குட் நியூஸ்' படத்தின் இயக்குனர் ராஜ் மேத்தா எனது 21வது புதிய இயக்குனர். அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை விட புதிய இயக்குனர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. படம் நன்றாகப் போகவில்லை என்றால் அவர்கள் வாழ்வு அவ்வளவுதான். நான் அவர்களை நம்புகிறேன், அவர்களிடம் எனது கருத்துக்களைத் திணிப்பதில்லை.
கதை, திரைக்கதையை நம்புகிறேன். அது சிறப்பாக இருந்தால் 60 சத வேலை முடிந்தது. அதன் பிறகு இயக்குனரின் கையில்தான் படம் இருக்கிறது,” என்று அவருடைய சினிமா வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'குட் நியூஸ்' படத்தில் கரீனா கபூர்கான், கியாரா அத்வானி, தில்ஜித் ஜோஸ்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது.