Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பெரிய இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு தரவில்லை - அக்ஷய்குமார்

04 டிச, 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Big-directors-did-not-give-chance-says-Akshaykumar

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். தமிழில் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். இந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் அதிக வசூலைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் நடித்துள்ள 'குட் நியூஸ்' படம் இந்த மாதம் வெளிவர உள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அக்ஷய்குமார் பேசகையில் பெரிய இயக்குனர்கள் அவர்களது படங்களில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

“பெரிய இயக்குனர்கள் உங்களைத் தேர்வு செய்யாத போது, நாம் நமது சொந்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு பெரிய பப்ளிகேஷன்களில் வாய்ப்பில்லாத போது சிறியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கிருந்து நாம் அடுத்த கட்டத்திற்கு தாவ வேண்டும். வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நாம் திறமைசாலியாகத்தானே இருக்கிறோம், ஏன் நம்மை யாரும் தேர்வு செய்யவில்லை என யோசிக்கக் கூடாது.

பெரிய இயக்குனர்கள் எனது படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால், என்னை வைத்து அவர்கள் படங்களை இயக்கியது கிடையாது. தகுதியுடன் இருக்கும் சிலரைத் தேடி அவர்கள் செல்கிறார்கள். இங்கு கான்கள் மட்டும் கிடையாது, கபூர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தகுதி இல்லை என நினைக்கிறேன், அதனால் எனது வழியை நான் தேர்ந்தெடுத்தேன்.

'குட் நியூஸ்' படத்தின் இயக்குனர் ராஜ் மேத்தா எனது 21வது புதிய இயக்குனர். அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை விட புதிய இயக்குனர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள். ஏனென்றால் இது அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. படம் நன்றாகப் போகவில்லை என்றால் அவர்கள் வாழ்வு அவ்வளவுதான். நான் அவர்களை நம்புகிறேன், அவர்களிடம் எனது கருத்துக்களைத் திணிப்பதில்லை.

கதை, திரைக்கதையை நம்புகிறேன். அது சிறப்பாக இருந்தால் 60 சத வேலை முடிந்தது. அதன் பிறகு இயக்குனரின் கையில்தான் படம் இருக்கிறது,” என்று அவருடைய சினிமா வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

'குட் நியூஸ்' படத்தில் கரீனா கபூர்கான், கியாரா அத்வானி, தில்ஜித் ஜோஸ்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்தை தள்ளிப் போட்ட அர்ஜுன் கபூர்திருமணத்தை தள்ளிப் போட்ட அர்ஜுன் ... பச்சை நிற கவர்ச்சி உடையில் சிக்கென கியாரா அத்வானி பச்சை நிற கவர்ச்சி உடையில் சிக்கென ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nizamudin - trichy,இந்தியா
05 ஆக, 2022 - 19:36 Report Abuse
nizamudin எப்படி தருவார்கள் நடிப்பில் நீங்கள் இன்னும் உயர வேண்டும் மத்திய அரசு தொடர்பும் குறைக்க வேண்டும் / மத்திய அரசும் சினிமா துறையினரும் சுமுக உறவில் இல்லை /அரசு சிஇனிமாவை விரும்புவதில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in