யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூர். இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அர்ஜுனும், நடிகை மலைகா அரோராவும் காதலித்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து வாழும் மலைகாவுக்கு, 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான். விரைவில் அர்ஜுன், மலைகா திருமணம் நடைபெறும் என பாலிவுட்டே எதிர்பார்த்து வருகிறது. சமீபத்திய பேட்டியில் கூட தன் திருமணம் எங்கு, எப்படி நடைபெற வேண்டும் என்ற தன் விருப்பத்தை மலைகா கூறியிருந்தார்.
இந்நிலையில், அர்ஜுன் கபூர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'இப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசரம் எதுவும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார். மேலும், "நேரம் வரும் போது நாங்களே எங்களது திருமணத்தைப் பற்றிச் சொல்கிறோம். எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து முடிவு செய்வோம்", எனக் கூறியுள்ளார்.