Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛இருட்டு'க்கு ஏகப்பட்ட வெட்டு

04 டிச, 2019 - 11:43 IST
எழுத்தின் அளவு:
More-cut-to-Iruttu

காமெடி நடிகர் விடிவி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் இருட்டு. இதனை முகவரி, தொட்டிஜெயா, நேபாளி படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கி உள்ளார். சுந்தர்.சி, புதுமுகம் ஷாக்சி, சாய் தன்சிகா, விமலா ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் தணிக்கையில் படாதபாடுபட்டிருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் வி.இசட் துரை கூறியதாவது:

பொதுவாக பேய் படங்கள் என்றால் இந்து மற்றும் கிறிஸ்தவ மத பின்னணியில் தான் வெளிவரும். இந்தியாவிலேயே முதன் முறையாக இஸ்லாமிய மத பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இருட்டு. இந்துக்கள் பேய் என்பார்கள், கிறிஸ்தவர்கள் சாத்தான் என்பார்கள், இஸ்லாமியர்கள் ஜின் என்பார்கள். இந்த ஜின்னை வைத்து உருவாகி உள்ள படம். நான் ஒரு முஸ்லிம் என்பதால் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு படமாக்கி இருக்கிறேன்.

படத்தை தணிக்கை குழுவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது. படம் ரொம்ப பயமுறுத்துகிறது ‛ஏ' சான்று தான் தருவோம் என்றார்கள். ஏ சான்று பெற்றால் தியேட்டருக்கு பெண்கள் வரமாட்டார்கள். தொலைக்காட்சி உரிமம் விற்க முடியாது. எங்களுக்கு யு/ஏ வேண்டும் என்று கேட்டோம். 10 காட்சிகள் வரை நீளத்தையும், பயமுறுத்தும் தன்மையையும் குறைத்தால் யுஏ தருவோம் என்றார்கள்.

படமோ பேய் படம் அது ரசிகர்களை பயமுறுத்தத்தான் எடுக்கப்படுகிறது. அதை குறைக்க சொன்னால் எப்படி என்று வாதிட்டோம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அது உங்கள் பிரச்சினை என்றார்கள். வேறு வழியில்லாமல் நான்கைந்து முக்கியமான காட்சிகளின் பயமுறுத்தலை குறைத்து யுஏ சான்றிதழ் வாங்கி இருக்கிறோம். என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
5 மொழிகளில் தயாராகும் அவனே ஸ்ரீமன் நாராயணா5 மொழிகளில் தயாராகும் அவனே ஸ்ரீமன் ... சிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட் சிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
04 டிச, 2019 - 17:06 Report Abuse
S Ramkumar துறை என்று பெயரை வைத்து கொண்டு முஸ்லீம் என்கிறீர்கள். பேரை மாற்றவேண்டியது தானே. பிற்காலத்தில் துறை என்பது முஸ்லீம் பெயர் என்று வாதிடுவார்கள். இப்பெல்லாம் கிருஸ்துவர்கள் அப்புடிதானே நடந்து கொள்ளுகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in