Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛சம்பவம்' எங்க தலைப்பு: விஜய் படக்குழுவிற்கு இயக்குனர் விளக்கம்

04 டிச, 2019 - 11:32 IST
எழுத்தின் அளவு:
Sambavam-titled-is-ours

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸின் ஜான் மேக்ஸ், ‛சம்பவம்' என்ற பெயரில் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷை வைத்து படம் தயாரிக்கிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்குகிறார். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

இவர்களுடன், பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‛தளபதி 64' படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தயாரித்த போஸ்டர்கள் வெளியாகின. இதனால் பதறிப்போன சம்பவம் படத்தின் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம். இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அதில், ‛‛நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

விஜய் படக்குழுவினர் சம்பவம் என பெயரை அறிவிக்காத நிலையில் சம்பவம் படக்குழு தானாக முன்வந்து இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது. "இதுவும் ஒரு விளம்பரம் தான்" என்கிறது விஜய் படக்குழு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடர்ந்து 12 மணி நேரம் டப்பிங் பேசிய சத்யராஜ்தொடர்ந்து 12 மணி நேரம் டப்பிங் பேசிய ... ‛டம்மி ஜோக்கர்' ‛டம்மி ஜோக்கர்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in