யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
கன்னடத்தில் இளம் நடிகர்களில் முக்கியமானவராக வளர்ந்து வருபவர் ரக்சித் ஷெட்டி. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் தர்பார் படத்தில் முக்கியமான கதபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னை தேடி வந்ததாகவும், ஆனால் தன்னிடம் அவர்கள் கேட்ட தேதிகளில் ‛அவனே ஸ்ரீமன் நாராயணா' என்கிற படத்தில் நடித்து வந்ததால் ‛தர்பார்' படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் சமீபத்தில் கூறியுள்ளார். ரஜினியுடன் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையில் இருந்த தனக்கு வாய்ப்பு தேடிவந்தும் நடிக்க முடியாமல் போனது ரொம்பவே வருத்தம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
கீதா கோவிந்தம் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் அறிமுகமானபோது அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த ரக்சித் ஷெட்டி. அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு, அதை தொடர்ந்து கடந்த 2017ல் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் கீதா கோவிந்தம் படத்தில் கிடைத்த புகழை தொடர்ந்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கிடைத்த வரவேற்பு காரணமாக இவர்களது காதலில் விரிசல் விழுந்து, இருவரும் நிச்சயதார்த்தத்துடன் தங்களது உறவை முடித்துக்கொண்டது தனிக்கதை.