Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ மோதல்: என்ன செய்யும் சமரச தீர்வு மையம்?

03 டிச, 2019 - 19:15 IST
எழுத்தின் அளவு:
Prasad-studio-issue:-What-will-happend

சென்னை, சாலிகாரமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து தன்னுடைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. கடந்த 1976ல் இருந்து அந்தப் பணியை, பிரசாத் ஸ்டூடியோவில் வைத்தே செய்து வருகிறார் இளையராஜா. இதற்காக, ஸ்டூடியோவின் உரிமையாளர் எல்.வி.பிரசாத்திடம் வாடகை ஒப்பந்தப் பத்திரமும் போட்டு இருந்தார். முறையாக வாடகையையும் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், பிரசாத்தின் பேரன், சாய் பிரசாத், ஸ்டூடியோ நிர்வாகப் பொறுப்பை ஏற்றதும், இளையராஜாவுக்கு சிக்கல் ஏற்படத் துவங்கியது. இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றும் நோக்கில், அவருக்கு பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் இருந்து இடைஞ்சல்கள் கொடுக்கத் துவங்கினர். இளையராஜா இசையமைக்கும் பகுதியில் இருபதுக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களையும், மேசைகளையும் கொண்டு வந்து போட்டு, இசைக் கருவிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினர். இளையராஜா அங்கிருந்து, இசையமைக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, இசையமைப்பாளர் இளையராஜா, பல முறை சொல்லிப் பார்த்தும், நிர்வாகத் தரப்பில் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்தப் பிரச்னையில் சமரசம் பேசுவதற்காக, சில நாட்களுக்கு முன், இயக்குநர் பாரதி ராஜா தலைமையில், சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர், பிரசாத் ஸ்டூடியோவுக்குச் சென்றனர்.

அவர்களை உள்ளே விட மறுத்த காவலர்கள், பாரதிராஜாவையும், சீமானையும் கட்டாயம் உள்ளே விட முடியாது என கூறி எச்சரித்தனர். ஆனாலும், அவர்கள் உள்ளே சென்று விட்டனர். பின், சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எந்த சமரசமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, பிரசாத் ஸ்டூடியோ மீது, இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆனது. இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து உள்ளது. அதனால், விரைவில் இந்தப் பிரச்னை பேசி முடிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பர் 6ல் சிறு படங்களின் மோதல், முந்தப் போவது யார் ?டிசம்பர் 6ல் சிறு படங்களின் மோதல், ... தர்பார் பட வாய்ப்பை நழுவவிட்ட ராஷ்மிகாவின் மாஜி காதலர் தர்பார் பட வாய்ப்பை நழுவவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04 டிச, 2019 - 07:58 Report Abuse
Natarajan Ramanathan அனுமதி மறுத்தபிறகும் அத்துமீறி உள்ளே நுழைந்த பாரதிராஜாவையும் சீமானையும் ஏன் TRESPASSING கைது செய்யவில்லை?
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
03 டிச, 2019 - 20:01 Report Abuse
Believe in one and only God பிரசாத் studio இளையராஜாவுடையது கிடையாது. குறைந்த வாடகையில் நிறைய சம்பாதித்தார். இளையராஜா அடுத்தவருக்கு குறைவாக பணம் கொடுத்து நிறைய சம்பாதிக்கணும். அரசியலை பயன்படுத்தி கொண்டு இளையராஜா அட்டூழியம் பண்ணுகிறார்.,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in