Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு - பாராட்டா, கூட்டணியா ?

03 டிச, 2019 - 16:30 IST
எழுத்தின் அளவு:
Did-Loesh-Kanagaraj-to-direct-Rajini.?

தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ரஜினியோ அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் என்ற செய்திகள் அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தீபாவளிக்கு வெளிவந்த 'கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இடையேயான சந்திப்பு நடந்த பிறகு அது புதிய படத்திற்கான கூட்டணியாகவும் இருக்கலாம் என சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். 'கைதி' படத்தைப் பற்றிப் பாராட்டத்தான் லோகேஷை ரஜினி அழைத்தார் என்று தகவல்.

'தர்பார்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்படியும் நான்கைந்து மாதங்களில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு அவர் நடிக்கப் போகும் படத்தை இயக்க கடும் போட்டி உள்ளது.

'தர்பார்' படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க ஏஆர்.முருகதாஸ் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்திய பேட்டியில் கவுதம் மேனனும் ரஜினிகாந்த் இயக்க ஆர்வமாக உள்ளதாகச் சொல்லியிருந்தார். 'பேட்ட' படம் வெற்றி பெற்றதும் மீண்டும் ரஜினிகாந்தை இயக்க விரும்புகிறேன் என கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இப்போது லோகேஷ் கனகராஜும் அந்தப் போட்டியில் இணைந்திருக்கிறார் என்கிறார்கள். யாருக்கு ரஜினி 'ஓகே' சொல்லப் போகிறார் என்பது சிவா - ரஜினிகாந்த் படம் முடியும் தருவாயில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'சைகை' மொழி கற்று நடித்த அனுஷ்கா'சைகை' மொழி கற்று நடித்த அனுஷ்கா டிசம்பர் 6ல் சிறு படங்களின் மோதல், முந்தப் போவது யார் ? டிசம்பர் 6ல் சிறு படங்களின் மோதல், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Saravanan SA - Thni,இந்தியா
03 டிச, 2019 - 19:57 Report Abuse
Saravanan SA பேட்ட படம் வெற்றியா? என்ன கொடும சரவணன் இது..... பெரிசு அடங்காது போலவே...
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 டிச, 2019 - 11:23Report Abuse
JMKசர்க்கார் / பீகிள் / நேர் கொண்ட பார்வை படங்கள் வெற்றி படங்களா? எல்லாம் பிரமை சரவணா? சினிமாவில் இதெல்லாம் சாதாரணம் சரவணா ?...
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03 டிச, 2019 - 18:13 Report Abuse
A.George Alphonse இவர் எல்லோருக்குமே ஓகே சொல்லி கட்சி ஆரம்பித்தால் கூட நடிக்க போய்விடுவார்.இதில் எந்த மாற்றமும் இல்லை.விசில் அடுச்சான் குஞ்சுகளுக்கு மட்டும் எப்போதுமே ஏமாற்றம்தான்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
04 டிச, 2019 - 11:24Report Abuse
JMKநன்றி விசில் அடிச்சான் பெரிசு ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in