யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
தெலுங்கில் வெளிவந்த 'பாகமதி' படத்திற்குப் பின் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்து 2020, ஜனவரி 31ல் வெளிவர உள்ள படம் 'நிசப்தம்'.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளார்கள். மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் இது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் படத்தில் அனுஷ்காவின் ஈடுபாட்டைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்.
இப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடிக்கிறார் அனுஷ்கா. அதற்காக 'சைகை' மொழியை மூன்று மாதங்கள் கற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிக்க வந்தாராம். நேற்றைய நிகழ்வில் அனுஷ்கா கலந்து கொள்ளவில்லை.
அவர் உடல் எடையைக் குறைக்க வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின் இந்தியா வருவார் என்கிறார்கள். வந்ததும் கௌதம் மேனன் இயக்க உள்ள படத்தில் அனுஷ்கா நடிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.